Baakiyalakshmi Serial: கோபியை எங்க ஒளிச்சி வச்சிருக்கீங்க...ராதிகா வீட்டுக்கே சென்ற ஈஸ்வரி
அம்ரிதா வீட்டுக்கு செல்லும் எழில் அங்கு அவரிடம் அம்மா, அப்பா இடையே விவாகரத்து ஆன தகவலை தெரிவிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை தேடி ராதிகா வீட்டுக்கு ஈஸ்வரி செல்லும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
இந்த கோவத்த கொஞ்சம் உங்க பையன் கோபி மேல காமிங்க.. 🙄
— Vijay Television (@vijaytelevision) August 23, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/9L1kAaEw96
வேலைக்கு செல்லும் செழியனை நிறுத்தி சாப்பிட்டு போக சொல்லும் பாக்யாவை அவர் திட்டுகிறார். இன்னிக்கு சாப்பிட சொல்லிட்டு பின்னாடி தியாகியா தன்னை காமிப்பாங்க என சொல்கிறார். இதனால் மூர்த்தி செழியனை எச்சரிக்கிறார். ஜெனியும் பாக்யா ஆன்ட்டிக்கும் கோபி அங்கிளுக்கும் இருக்க பிரச்சனை வேற. ஏன் நீ அதை புரிஞ்சிக்காம இப்படி பேசுற என சொல்ல செழியன் எனக்கு பசிக்கல போதுமா..என சொல்லி அங்கிருந்து செல்கிறார். இதன்பின் ஸ்கூலுக்கு செல்ல தலை பின்னி விட சொல்லி இனியா வந்து ஜெனியை அழைக்கிறார்.
ஆனால் பாக்யாவோ ஜெனியை மத்தவங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லி, இனியாவுக்கு தான் தலை பின்னி விடுவதாக கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் இனியா சீப்பை எரிந்து விட்டு எப்படி எல்லாம் பண்ணிட்டு உன்னால பாசமாக இருக்க மாதிரி நடிக்க முடியுது என தெரிவிக்கிறார். இதனையெல்லாம் கண்ட ஈஸ்வரி இதெல்லாம் தேவைதானா...போன வாரம் நீ ஆபீஸ்ல இருந்தப்ப உன்னை தேடுனா..இப்ப இப்படி பேசுறார் என பாக்யாவிடம் சீறுகிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியிடம் பேசும் மூர்த்தி, கோபி நீ நினைச்ச மாதிரியே ராதிகா வீட்டுக்கு போனதாக தெரிவிக்கிறார். இதனால் கோபத்தில் ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு செல்கிறார்.
இதற்கிடையில் அம்ரிதா வீட்டுக்கு செல்லும் எழில் அங்கு அவரிடம் அம்மா, அப்பா இடையே விவாகரத்து ஆன தகவலை தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் அம்ரிதா, தான் பாக்யாவை பார்க்க வேண்டும் என தெரிவிக்க எழிலோ இப்போது நேரம் சரியில்லை, இன்னொரு நாள் கூப்பிட்டு போகிறேன் என தெரிவிக்கிறார்.
ராதிகா வீட்டுக்கு செல்லும் ஈஸ்வரி, அங்கு ராதிகாவிடம் சண்டைக்கு செல்கிறார். கோபியை ஒளித்து வைத்து விட்டு என்கிட்ட அவர் இங்க இல்லன்னு கதை சொல்றீங்களா என கேட்டு ஒவ்வொரு ரூம் ஆக போய் தேடுகிறார். ராதிகாவோ ஏன் ஒருத்தர் ஒருத்தரா வந்து இப்படி சித்திரவதை பண்றீங்க என சொல்லி ஆதங்கப்படுகிறார். மேலும் ஈஸ்வரி பேச்சால் ஆத்திரமடையும் ராதிகா அம்மா அவரிடம் இப்படி எல்லாம் பேச வெக்கமா இல்ல என பேச, பதிலுக்கு ராதிகாவிடம் ஈஸ்வரி நீ கோபியை வீட்டுக்கு உள்ளே ஒளிச்சி வைக்கல..ஆனால் முந்தானைக்குள்ள ஒளிச்சி வச்சல என கேட்கிறார். இதுக்கு மேல நீங்க பேசுறதை என்னால கேட்க முடியாது என ராதிகா சொல்வதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.