மேலும் அறிய

Baakiyalakshmi Serial:‛செத்து போயிடுவேன்’ மிரட்டும் கோபி... ஏற்றுக் கொள்ள தயாராகும் ராதிகா?

கோபி இப்படி ஒரு சம்பவம் பண்ணதும் எனக்கு அவன் மேல தான் கோபம் வந்துச்சி. ஆனால் நீ இவ்வளவு நடந்தும் கோபியை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சா என அர்த்தம் என மூர்த்தி ராதிகாவிடம் கேட்கிறார்.

பாக்யலட்சுமி சீரியலில் கோபி மேல் கொண்ட கோபத்தால் மூர்த்தி ராதிகாவை சந்தித்து திட்டும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

ராதிகாவிடம் முடிவு கேட்ட கோபி 

ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி அவரிடம் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், நான் உனக்காக தானே நான் விவாகரத்து பண்ணேன் என கூறுகிறார். அதற்கு உங்களோட இந்த நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன் என குற்ற உணர்ச்சியா இருக்கிறது என ராதிகா சொல்கிறார். உடனே கோபி, நான் உன்மேல வச்சிருக்கிற அன்பு உண்மை என கூறுகிறார். என்கிட்ட உண்மையாயிருந்தேன்னு சொல்றீங்க,. ஆனால்  யாரு உங்க மனைவின்னு சொல்லிருந்தீங்கன்னா இதெல்லாம் நடந்து இருக்குமா என கேட்கிறார். மறுபடியும் ஆரம்பிக்காத. உன்னோட வாழணும்ன்னு ஆசைப்பட்ட காரணத்துக்காக நடுத்தெருவுல நிக்கிறேன். அதனால நல்லா யோசிச்சி ஒரு முடிவு எடுத்து எனக்கு மெசெஜ் பண்ணு என சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து செல்கிறார். 

அப்போது ராதிகா வீட்டில் இருந்து வெளியேறுவதை மூர்த்தி பார்க்கிறார். அவர்  கோபத்துடன் ராதிகாவை பார்த்து, கோபி இப்படி ஒரு சம்பவம் பண்ணதும் எனக்கு அவன் மேல தான் கோபம் வந்துச்சி. ஆனால் நீ இவ்வளவு நடந்தும் கோபியை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சா என அர்த்தம். பாக்யா உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தும், நாங்க உங்கிட்ட கள்ளம், கபடம் இல்லாம பழகுனோம். அவனால 2 பொண்ணுங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கே நான் அவ்வளவு தூரம் வருத்தப்பட்டேன். ஆனால் இங்க வந்து பார்த்தா இதுக்கெல்லாம் என அர்த்தம் என கேட்கிறார். இதைக் கேட்ட ராதிகா, நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன். நீங்க வேற ஏன் இப்படி பேசுறீங்க கேட்க?... நீ நொந்து போயிருக்கன்னா அங்க ஏன் குடும்பம் சிதறி போய் கெடுக்கே அதற்கு என்ன பண்ண? என ஆவேசமாக மூர்த்தி பேசுகிறார். 

மூர்த்தியை திட்டிய சந்துரு

அதுவரை பொறுமையாக இருந்த ராதிகாவின் அண்ணன் சந்துரு, மூர்த்தியிடம் வாக்குவாதம் செய்கிறார். உங்களுக்கு இருக்குறது குடும்பம்ன்னா, எங்களுக்கு குடும்பம் இல்லையா. என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கு. எல்லாமே என் தங்கச்சிய வந்து திட்டுறீங்களே. என் பொண்டாட்டி பாக்யா தான்னு சொல்லாம பழகுனது உங்க பையன் தானே..இப்ப கூட அவர் ஏன் இங்க வந்தாருன்னு கேட்காம நீங்க பாட்டுக்கு கத்துறீங்க என எகிற, மூர்த்தி தான் கேட்டது தப்பு தான். என்ன மன்னிச்சுருங்க என சொல்லி நகர்கிறார். பின்னர் ராதிகாவிடம் சந்துரு, இப்பதான் கோபி ஏன் இங்க வந்தாருன்னு புரியுது. நம்மளையே இப்படி டார்ச்சர் செய்றாங்கன்னா கோபியை எப்படி பண்ணிருப்பாங்கன்னு சொல்கிறார்.இதைக்கேட்ட ராதிகா எனக்கும் அதான் தோணுது என கோபி மேல் பரிதாப்படுகிறார். 

இதன் பின் பாக்யா வீட்டில் அனைவருக்கும் உணவு பரிமாற யாரும் சாப்பிடாமல் எழுந்து போகிறார்கள். பின்னர் சோபாவில் அமர்ந்து தூங்கும் பாக்யாவை எழுப்பி இளைய மகன் எழில் பால் கொடுத்து சாப்பிட சொல்கிறார். அப்போது பாக்யா நீயாவது என்கூட இருக்கியே என நொந்து போய் பேசுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. போகிற போக்கை பார்த்தால் ராதிகா மனது மாறி கோபியை ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget