Amudhavum Annalakshmiyum: சுமதிக்கு எதிரியான அமுதா.. வீட்டுக்குள் நுழைந்ததும் வந்த சிக்கல்..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் சுமதியை அமுதா வீட்டுக்கு அழைத்து வரும் காட்சிகள் இடம் பெறுகிறது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
முன்னதாக புவனாவை கடத்திய செல்வா தனது மகள் சுமதியை தன்னிடம் ஒப்படைத்தால் தான் அவரைவிடுவிப்பேன் என கூறுகிறார். இதனால் பதற்றத்தில் இருக்கும் அமுதாவுக்கு வடிவேலு, சுமதியை திருமணம் செய்து கொள்ளப் போவது தெரிய வருகிறது. இதனால் மாணிக்கத்துடன் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு அமுதா வருவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுகிறது. ஆனால் சுமதியை அழைத்துச் சென்று செல்வாவிடம் ஒப்படைத்து விட்டு புவனாவை மீட்கிறார்.
இன்றைய எபிசோடில் புவனா கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லாமல் மறைத்ததால் செந்தில் கோபப்படுகிறார். இதனால் அமுதா நடந்த அனைத்தையும் சொல்கிறாள். மேலும் செல்வாவிடம் சுமதியை 5 மணிக்குள்ள கொண்டு போய் சேர்க்காமல் இருந்திருந்தால், அவர் புவனாவை கொலை செய்திருப்பார் என்றும், அதுமட்டுமில்லாமல் வடிவேலுவையும் கொல்ல பிளான் செய்ததையும் அமுதா சொல்கிறார்.
View this post on Instagram
இதனையடுத்து அமுதா அன்னலட்சுமியிடம், நான் சுமதியை அவங்க அப்பா வீட்டுல கொண்டு போய் சேர்த்து விட்டேன். என்னைக்கு இருந்தாலும் சுமதி நம்ம வீட்டு பொண்ணு. அவளை நான் விட்டு குடுக்க மாட்டேன். செல்வாவின் கோபம் தணியட்டும் அவருக்கு எடுத்து சொல்லி சுமதியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன் என சமாதானம் சொல்கிறார். இதன் பின்னர் வடிவேலு குடித்து விட்டு வந்து அமுதாவிடம் தகராறு செய்கிறார்.
நீ மட்டும் உங்க அப்பாவை விட்டுட்டு இங்க வந்து இருக்கும் போது, நான் கட்டுன பொண்ணு மட்டும் அங்க அப்பா வீட்டுல இருக்கணுமா?, இது என்ன நியாயம் எனக் கேட்டு கலாட்டா செய்கிறார். மறுநாள் காலையில் சின்னா, பரமு இருவரும் பதறி போய் ஓடி வருகின்றனர். அவர்கள் செல்வா மகள் சுமதி மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாக சொல்ல, அன்னலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகின்றனர்.
செல்வா ஆட்கள் அன்னலட்சுமி குடும்பத்தை தேடி வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லை என தெரிய வருகிறது. உடனே அவ்வளவு பேரையும் தேடிப் பிடிச்சி இங்க கொண்டு வாங்க என செல்வா சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கு அமுதா வருகிறார். உள்ளே வந்த அமுதா சுமதிக்காக பேசுகிறார். இதில் சமரசம் ஏற்படுகிறது.
தொடர்ந்து சுமதிக்கு சிகிச்சை முடிந்த பின்னர், சுமதி, வடிவேலு இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். உள்ளே வரும்போது சுமதி அமுதாவிடம், உனக்கு இருக்கு என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.