Amudhavum Annalakshmiyum: சிதம்பரத்துக்கு சவால் விடும் அமுதா.. வரிசைகட்டும் பிரச்னை.. அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!
சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற அமுதாவிற்கு பரிசு வழங்கும் போது சிதம்பரம், அமுதாவிடம் சாமியே சொன்னாலும் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன் என கூறுகிறார்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதா சைக்கிள் போட்டியில் வென்ற பணத்தை பறிக்க முயற்சி நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
முன்னதாக சைக்கிள் போட்டியில் அமுதா வெற்றி பெற்ற நிலையில், உமா செய்த சதியால் மயக்க மருந்து கலந்த தண்ணீரை குடித்ததால் மயங்கி விழுகிறார். பின்னர் சிதம்பரம், அன்னலட்சுமியிடம் என் பொண்ணுக்கு அப்படி என்ன மந்திரம் போட்டீங்க என கேட்கிறார். அதற்கு அன்னம் உங்களுக்கு வேணா அவ மகளா இருக்கலாம் எங்களுக்கு அவ குலசாமி என தெரிவிக்கும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது.
View this post on Instagram
இன்றைய எபிசோடில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற அமுதாவிற்கு பரிசு வழங்கும் போது சிதம்பரம், அமுதாவிடம் சாமியே சொன்னாலும் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன் என கூறுகிறார். நான் ஆசையா வளர்த்த பொண்ணு என் பேச்சை கேக்காம வீட்டை விட்டுட்டு போயிட்டா, இனிமே அவ என் பொண்ணே கிடையாது என உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத அமுதா கண்ணீருடன் அப்படி நான் என்ன அப்புச்சி தப்பு பண்ணிட்டேன். என்னை நீங்க மறுபடியும் அமுதா வீட்டுக்கு வான்னு உங்க வாயால சொல்ல வைப்பேன்.. அது நடக்கும் என சவால் விடுகிறாள். அடுத்ததாக அமுதாவிற்கு சைக்கிள் ஓட்டி கால்கள் வீங்கியிருக்க, செந்தில் அவளது காலை பிடித்து விடுகிறான்.
காலை பார்த்து வருத்தப்பட்டு செந்தில் அழ, கண்ணீர் துணிகள் அமுதாவின் காலில் விழுகிறது. இதனையடுத்து சின்னா பரமு, வடிவேலுவிடம் சைக்கிள் போட்டியில் ரூ.50 ஆயிரம் ஜெயிச்சிருக்கா. கையில ஒண்ணும் இல்லாத போதே நம்மளை அவ்வளவு அதிகாரம் பண்ணி வேலைக்காரங்க மாதிரி நடத்துனா. இனிமே பொறுக்க முடியாது. எப்படியாவது அவகிட்ட இருந்து அந்த பணத்தை தூக்கிரணும் என வடிவேலுவிடம் சொல்கிறான்.
இப்படியான நிலையில் வடிவேலுக்கு கடன் கொடுத்தவன் வந்து பணத்தை கேட்டு அவனை அடிக்க வீட்டில் பிரச்சனையாகிறது. அமுதாவிடம் இருக்கும் பணத்தை பரமு, சின்னா எடுத்து குடுக்க சொல்லி நாடகமாடுகின்றனர். ஆனால் அமுதா கொடுக்காமல் இருக்கிறார். இதனால் அன்னத்திடம் இருவரும் அமுதாவை பற்றி புகார் கூறுகின்றனர். அப்போது அங்கு வரும் செந்தில் கடன்காரனும் சின்னாவும் சைகையில் பேசிக் கொள்வதை பார்த்து விடுகிறார்.
செந்திலும் மாணிக்கமும் கடன் கொடுத்தவனை வீட்டிற்கு பின்னால் அழைத்துச் சென்று அடி வெளுக்கிறார்கள். அவன் தனக்கு பணம் எல்லாம் தர தேவை இல்லை என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.