Amudhavum Annalakshmiyum: செந்திலை படிக்க வைக்க அமுதா எடுத்த முடிவு.. நினைத்தது நடக்குமா? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!
தொடர்ந்து குலதெய்வ கோவில் திருவிழாவில் சைக்கிள் போட்டிக்கான முதல் பரிசு 50,000 என சொல்ல, செந்தில் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக தான் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்திலை படிக்க வைக்க அமுதா செய்துள்ள சவாலில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
முன்னதாக குலதெய்வ கோயிலுக்கு சென்ற இடத்தில், அமுதாவிடம் சிதம்பரம் பிரச்சினை செய்த நிலையில், அதையும் காதில் வாங்காமல் கணவன், மனைவியாக அமுதாவும் செந்திலும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி கோவிலில் சம்பிரதாயங்களை நிறைவேற்றுகின்றனர். அப்போது பழனிக்கு சாமி வருகிறது. உடனே அவர் சாமியாடிக் கொண்டே, அமுதாவிடம் புடவையை கொடுக்க, உமா புரியாமல் பார்க்கிறாள்.
முன்னதாக முனீஸ்வரன் சாமி இறங்கி யாருக்கு வந்து புடவையை கொடுக்கிறதோ அவர்களை சாமி ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் என பூசாரி சொல்கிறார். உமா பழனியை சாமி வந்த மாதிரி நடிக்க சொல்ல, ஆனால் உண்மையிலேயே அவருக்கு சாமி வருகிறது.
View this post on Instagram
இதனையடுத்து பழனி சிதம்பரத்தைப் பார்த்து, அமுதாவுக்கு என்னை கும்பிடுற வர்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு, அதை நீ தடுக்க கூடாது. என்னைக்கும் அவ என் பிள்ளை, அவ போன புகுந்த வீடும் என் குடும்பம் என சொல்லிவிட்டு மயங்கி விழுகிறான். பின்னர் பழனி மயக்கம் தெளிய, உமா ஏன் இப்படி பண்ணிட்டீங்க என சொல்ல, பழனி தனக்கு நடந்தது எதுவும் நினைவில்லை, எனக்கு உண்மையிலயே அருள் வந்துவிட்டதாக சொல்கிறார்.
தொடர்ந்து குலதெய்வ கோவில் திருவிழாவில், சைக்கிள் போட்டிக்கான முதல் பரிசு 50,000 என சொல்ல, செந்தில் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக தான் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் பழனியும் உமாவும் பிளான் செய்து ஊர்க்காரர் ஒருவர் மூலம் செந்திலை கலந்துக் கொள்ள கூடாது என சொல்ல வைக்கிறார்கள்.
இதனால் டென்ஷனாகும் அமுதா, நான் இந்த குடும்பத்து ஆள் தான். நான் கலந்துக்கலாம்ல என சொல்லிக் கொண்டு போட்டியில் கலந்து கொள்கிறார். இதனைக் கண்டு சிதம்பரம் கடுப்பாகிறார். விறுவிறுப்பாக நடக்கும் சைக்கிள் போட்டியில், கலந்து கொண்ட மற்ற ஆண்கள் ஒவ்வொருவராக போட்டியில் தோற்க அமுதாவும் மாரிமுத்துவும் கடைசியில் களத்தில் இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.