Amudhavum Annalakshmiyum: ரெஜிஸ்டர் ஆபிஸில் விறுவிறு வேலைகள்.. கடைசி நொடியில் ஷாக் கொடுத்த அமுதா.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்!
ஹவுஸ் ஓனர் வந்து இறங்கியதும் பத்திர ஆபிசில் பழனி அவசரப்படுத்த, திடீரென கம்ப்யூட்டர் வேலை செய்யாமல் போகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பழனி சதி வேலை செய்து வீட்டை எழுதி வாங்க திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஹவுஸ் ஓனர் வந்து இறங்கியதும் பத்திர ஆபிசில் பழனி அவசரப்படுத்த, திடீரென கம்ப்யூட்டர் வேலை செய்யாமல் போகிறது. அடுத்து அமுதா ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு வந்து இறங்க, வீடு பூட்டியிருக்க அவள் மீண்டும் போன் செய்ய ஓனர் எடுக்காமல் இருக்கிறார்.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேக்க, அவர் வீட்டை விற்க பத்திர ஆபிசுக்கு சென்று இருப்பதாக சொல்ல அமுதா ஆட்டோவில் ஏறி ரிஜிஸ்டர் ஆபிசுக்கு விரைந்து வருகிறாள். அமுதா அன்னலட்சுமியிடம் பழனி வீட்டை வாங்க போகும் விஷயத்தை சொல்ல, அன்னலட்சுமி கதிரேசன் போட்டோவை பார்த்து அமுதாவுக்கு உறுதுணையா இருந்து இந்த வீட்டை காப்பாத்தி குடுக்கனும் என வேண்டுகிறாள்.
இங்கே ரெஜிஸ்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் மீண்டும் வேலை செய்ய, ரிஜிஸ்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும் என்று சொல்ல பழனி சந்தோஷம் அடைகிறான். அதற்குள் கொஞ்ச நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபிசில் கரண்ட் போக பழனி மீண்டும் டென்ஷன் ஆகிறான். கிளர்க் கரண்ட் ஈவினிங் தான் வரும் என சொல்ல, ரிஜிஸ்டர் நாளைக்கு வாங்க என சொல்ல பழனி இன்னைக்கே முடித்தாக வேண்டும் என சொல்கிறான்.
இதையடுத்து பழனி நண்பருக்கு போன் செய்து ஜெனரேட்டரை கொண்டு வர சொல்லி அடுத்தகட்ட ஏற்பாடுகளை செய்ய அமுதா வரும் ஆட்டோ பாதியில் நின்று விடுகிறது. அமுதா மீண்டும் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்ய, பழனி போனை எடுக்காதீங்க, அவங்களால எல்லாம் பணத்தை குடுக்க முடியாது என சொல்லி போனை எடுக்க விடாமல் செய்கிறான்.
அடுத்ததாக பத்திரம் ரெடியாகி கையெழுத்து போடப் போகும் சமயம், பத்திரம் காற்றில் பறந்து செல்ல ஹவுஸ் ஓனர் கையெழுத்து போடப் போக, அமுதா ஓடி வந்து கொண்டிருக்க இங்கே அடுத்ததடுத்த தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்க ஒருவழியாக அமுதா உள்ளே வர பழனி ஷாக் ஆகி நிற்கிறான்.
இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.