TRP Rating 23rd Week: டி.ஆர்.பி லிஸ்டில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வெளியானது இந்த வாரத்துக்கான லிஸ்ட்
TRP Rating 23rd Week: டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலில் கடந்த வாரம் முன்னிலை வகித்த சீரியல்களின் லிஸ்ட் என்னென்ன என்பதை பார்க்கலாமா?
சின்னத்திரை ரசிகர்களை திங்கள் முதல் சனி வரை காலை முதல் இரவு வரை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துள்ளது சீரியல்கள் மட்டுமே. வீட்டின் வரவேற்பறைக்கே வந்து குதூகலப்படுத்தும் இந்த சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதன் அளவுகோலாக டி.ஆர்.பி ரேட்டிங் விளங்குகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் அந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் என்னென்ன ரேட்டிங் பெற்றுள்ளது என்பதையும் எந்த சீரியல் எந்த தொலைக்காட்சி சேனலில் முன்னிலை வகிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த போட்டியில் முதல் 10 இடங்களை பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே மட்டுமே நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த லிஸ்டில் வந்து போகும். அந்த வகையில் 23 வாரத்துக்கான டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
23வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலில் முதல் 10 இடத்தை எந்தெந்த சீரியல்கள் எவ்வளவு ரேட்டிங் பெற்று முன்னிலை வகிக்கின்றன என்பதன் லிஸ்ட் இதோ:
விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' தொடர் 5.51 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது 6.20 புள்ளிகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் 9வது இடத்தை பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மல்லி' தொடர் 6.31 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடிக்க விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடர் 6.45 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
6வது இடத்தை பிடித்துள்ள 'சுந்தரி' சீரியல் 6.48 புள்ளிகளை பெற 'வானத்தை போல' சீரியல் 7.68 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. 7.70 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது விஜய் டிவியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல். கடந்த வாரத்துடன் நிறைவு பெற்ற எதிர்நீச்சல் தொடர்ந்து நிறைவு பகுதி வாரத்தில் 7.84 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தை பிடித்தது.
முதல் இரண்டு இடங்களை பல வாரங்களாக தக்க வைத்து வருகிறது 8.65 புள்ளிகளுடன் 2வது இடத்தில் 'கயல்' சீரியலும் 9.57 புள்ளிகளுடன் முதல் இடத்தில் 'சிங்கப்பெண்ணே' சீரியலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் 23வது வாரத்திற்கானது மட்டுமே. வரும் வாரங்களில் இந்த ரேட்டிங் பட்டியலில் மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் வரும் வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.