![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Naveen Kanmani: சின்னத்திரை ஜோடிக்கு பட்டு குட்டி பிறந்தாச்சு.. பூரிப்பில் போஸ்ட் போட்ட நவீன்.. குவியும் வாழ்த்துக்கள்..!
சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி - சின்னத்திரை நடிகர் நவீன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தாச்சு!
![Naveen Kanmani: சின்னத்திரை ஜோடிக்கு பட்டு குட்டி பிறந்தாச்சு.. பூரிப்பில் போஸ்ட் போட்ட நவீன்.. குவியும் வாழ்த்துக்கள்..! Television news reader kanmani and actor naveen is blessed with a girl baby and naveen latest post holding little one's hand Naveen Kanmani: சின்னத்திரை ஜோடிக்கு பட்டு குட்டி பிறந்தாச்சு.. பூரிப்பில் போஸ்ட் போட்ட நவீன்.. குவியும் வாழ்த்துக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/02/1adcbf462ab09607f20fd33aedda03b21683024973654224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபகாலமாக சினிமா நடிகர் நடிகையர் மட்டுமின்றி சின்னத்திரை ரசிகர்கள், தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர்களுக்கும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்கள்.
பெண்களை கவர்ந்த கண்மணி :
பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணி தற்போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் கண்மணி தனது உடை, ஆபரணங்கள் தெரிந்து எடுத்து அணிவதால் அவரின் ட்ரெஸ்ஸிங் பார்க்கவே அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் குவிந்தனர். அது கண்மணியின் தனி சிறப்பு என்றே சொல்லலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நவீன். கலர்ஸ் தமிழ் சேனலின் 'இதயத்தை திருடாதே' சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் நவீன். இவரும் கண்மணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
கர்ப்பத்தை அறிவித்த நவீன் :
இருவரும் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றினாலும் இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. கண்மணியின் தெளிவான வார்த்தை உச்சரிப்புக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர் அவ்வப்போது போஸ்ட் போடுவது வழக்கம். அந்த வகையில் கண்மணி நவீன் கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து தாங்கள் விரைவில் பெற்றோராக போவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்கள். இந்த சந்தோஷமான செய்தியை கேட்ட அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர்.
பெற்றோர்களான நவீன் - கண்மணி தம்பதி :
கண்மணி நவீன் வளைகாப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது கண்மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் நவீன் தனது குழந்தையின் கையை பிடித்து கொண்டு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து " எங்களின் குட்டி பட்டு வந்தாச்சு... லைப் லைன்" என பதிவிட்டுள்ளார். நவீன் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
கண்மணியின் விருப்பம் போலவே அவருக்கு பெண் குழந்தை பிறந்ததில் நவீன் - கண்மணி தம்பதியினருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)