மேலும் அறிய

பார்த்துருப்பீங்க... ஆனால் கவனிச்சிருக்க மாட்டீங்க... - தமிழ் சினிமாவை ரசிக்க வைக்கும் ட்ரிக்ஸ்....

வடிவேலு காமெடியில் பிரபலமானதும் , சற்று சிக்கலான காமெடிதான் . அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கிய காமெடி

தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு படத்தோடு மற்ற படத்தை லிங் செய்ய வேண்டும் என்பதற்காகவே இயக்குநர்கள் சில சுவாரஸ்யங்களை செய்வார்கள். அது அந்த கதாபாத்திரமாக இருக்கலாம் , அல்லது காட்சிகளாக இருக்கலாம். அப்படி தமிழ் சினிமாவில் பிரபலமான காட்சி மற்றும் கதாபாத்திரங்களின் ரெஃபரன்ஸை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா ?

இந்த காமெடிய நம்ம யாராலும் மறக்க முடியாது. வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடித்திருப்பார்கள். அந்த காமெடி ரெஃபரன்ஸை தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். மந்திரி வீட்டில் ரைடிற்காக செல்லும் பொழுது , செந்தில் அங்கிருந்த பெட்டமாஸ் லைட்டை பார்த்து கவுண்டமணி சொல்வதை நினைத்து பார்த்து அதன் இழையை ரசிக்குவது போன்ற காட்சியை மீண்டும் அமைத்திருப்பார்கள் .

பார்த்துருப்பீங்க... ஆனால் கவனிச்சிருக்க மாட்டீங்க... - தமிழ் சினிமாவை ரசிக்க வைக்கும் ட்ரிக்ஸ்....

சிங்க பெருமாள் 

2010 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜாவுடைய அறிமுகப்படமான , ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியானது. இதில் பாலிவுட் ஸ்டார் ஜாக்கி செரீஃப் சிங்க பெருமாள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தின் இறுதியில் அவரை கொலை செய்வது போல் காட்டியிருப்பார்கள் . இதன் தொடர்ச்சியை தான் அடுத்ததாக எடுத்த சூப்பர் டீயூலக்ஸ் ஆந்தாலஜியில் இணைத்திருப்பார் இயக்குநர். திருநங்கையாக மாறிய விஜய் சேதுபதி ,தொலைந்த தனது மகனை தேடி அலையும் பொழுது , சுவர் ஒன்றில் சிங்கம் பெருமாள் நினைவஞ்சலி போஸ்டர் கிழிந்த நிலையில் இருப்பதை காணலாம்.

பார்த்துருப்பீங்க... ஆனால் கவனிச்சிருக்க மாட்டீங்க... - தமிழ் சினிமாவை ரசிக்க வைக்கும் ட்ரிக்ஸ்....

நினைத்தாலே இனிக்கும்! 

இன்றைக்கும் இந்த படம் பலரின் ஃபேவெரைட் . கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் சக்தி மற்றும் அனுஜா ஐயர் இருவருக்குமான காதல்தான் ஹைலைட். காதலை சொல்ல வரும் சூழலில் கதாநாயகன் இறந்துவிடுவது போல காட்சியை உருவாக்கியிருப்பார் இயக்குநர். அதன் பிறகு வெளியான யுவன் , யுவதி திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள். அங்கு விட்ட காதலை மீண்டும் இந்த படத்தில் ஆரமிப்பதாக எடுத்திருப்பார்கள். அதனை உணர்த்தும் விதமாக ஹீரோ , ஹீரோயின் முதல் சந்திப்பில் அழகாய் பூக்குதே பாடல் ஒலிக்கும்.

பார்த்துருப்பீங்க... ஆனால் கவனிச்சிருக்க மாட்டீங்க... - தமிழ் சினிமாவை ரசிக்க வைக்கும் ட்ரிக்ஸ்....

பேக்கரி காமெடி 

வடிவேலு காமெடியில் பிரபலமானதும் , சற்று சிக்கலான காமெடிதான் . அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கிய காமெடி . அதனை அர்ஜூனிடம் வடிவேலு வெளிப்படையாக பகிர, அதை ஊரெல்லாம் சொல்லிவிடுவார் அர்ஜூன். இந்த காமெடி ரெஃபரன்ஸை அதன் பிறகு வெளியான மணிகண்டா திரைப்படத்தில் பார்க்கலாம். அர்ஜூன் , ஜோதிகா, வடிவேலு காம்போவில் வெளியான இந்த திரைப்படத்தில் , ஜோதிகாவிடம் வடிவேலும் , “ ஒருத்தன் அவன் அக்காவை பற்றி சொன்ன ரகசியத்தையே பட்டி தொட்டியெல்லாம் “ என புலம்புவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஜி.வி.எம் 

ஜி.வி.எம் படங்கங்கள் என்றாலே ரெஃபரன்ஸிற்கு பஞ்சமே இருக்காதே. காட்சிகளை அழகாக லிங் செய்து கொடுப்பார். அதிலும் படம் இருமொழிகளில் உருவாவது நிச்சயமானால் நடிகர்களை ஒரே படத்தில் பயணிக்க வைப்பார். அப்படிதான் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின்  தமிழ் வெர்சனில் , தெலுங்கு வெர்சன் ஹீரோ நானியும் டிரைனில் பயணிப்பது போல் உருவாக்கியிருப்பார் இயக்குநர். அதே போல விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு வெர்சனில் நடித்த சமந்தாவை , தமிழில் சிம்புவுடன் ஒரு காட்டியில் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

Also Read | Mahaan Movie Review in Tamil: மகான்... விக்ரம் படமா? துருவ் படமா? கார்த்திக் சுப்பராஜ் படமா? ரீல் பை ரீல் விமர்சனம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
Embed widget