‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

"தற்போது நான் கொடைக்கானலில் இருக்கிறேன். ஓரிரு நாட்களில் சென்னை திரும்பியதும் விஷால் தொடர்பான பிரச்னைக்கு சரியான விளக்கம் கொடுத்து, விரைவில் இந்த விஷயத்தை தீர்த்து வைக்கிறேன்” என்று ஆர்.பி சௌத்ரி கூறியுள்ளார்.

FOLLOW US: 

காசோலை மற்றும் இதர ஆவணங்களை முறையாக திருப்பி தரவில்லை என்று கூறி பிரபல தயாரிப்பாளரும் சினிமா பைனான்சியருமான ஆர்.பி சௌத்ரி மீது நடிகர் விஷால்  போலீசில் புகார் செய்திருந்தது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தற்போது இது தொடர்பாக ஆர்.பி சௌத்ரி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இரும்புத்திரை திரைப்படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்த நிலையில் அவர் துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இதன் காரணமாக அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி கொடுத்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்த பிறகும், தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்னை வருமோ என விஷால் பயப்படுகிறார். தற்போது நான் கொடைக்கானலில் இருக்கிறேன். ஓரிரு நாட்களில் சென்னை திரும்பியதும் இந்த பிரச்னைக்கு சரியான விளக்கம் கொடுத்து, விரைவில் இந்த விஷயத்தை தீர்த்து வைக்கிறேன்” என்று கூறினார்.


Actor Rana on Tribal Families | ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ‛பாகுபலி’ ராணா


முன்னதாக, இரும்புத்திரை படத்திற்காக பிரபல சினிமா பைனான்சியர் சௌத்ரியிடம் பணம் பெற்றதாகவும் ஆனால் அந்த பணத்தை வட்டியுடன் தற்போது முழுமையாக திருப்பி அளித்துவிட்டதாகவும் நடிகர் விஷால் கூறியிருந்தார். 


 


கடனை முழுமையாக திருப்பி கொடுத்துள்ள நிலையில், கடன் வாங்கியதற்காக சௌத்ரியிடம் வழங்கிய காசோலை, பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை அவரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை என்றும், தற்போது அந்த ஆவணங்கள் தொலைத்துவிட்டதாக அவர் கூறிவருவதாகவும் நடிகர் விஷால் கூறினார். இதனைத் தொடர்ந்து தனது தரப்பில் இருந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மீது பிரபல நடிகர் ஒருவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி


ராஜஸ்தானை சேர்ந்த சௌத்ரி சினிமா துறையில் கால்பதிப்பதற்கு முன்பு நகை வியாபாரம் மற்றும் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டு மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான புது வசந்தம் திரைப்படம் தான் சௌத்ரி முதன்முதலில் தமிழில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயன் பூவே உனக்காக லவ் டுடே போன்ற பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார் சௌத்ரி.


ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்; கடன் விவகாரம் காவல்துறைக்கு சென்றது!

Tags: tamil cinema kollywood actor vishal rb Chowdhury police compliant RB Chaudhary Tamil Actor Vishal RB Chaudhary reply Vishal Complaint

தொடர்புடைய செய்திகள்

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

டாப் நியூஸ்

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு