Shanmuga Priyan Passed Away : தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்... பிரபலங்கள் இரங்கல்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஷண்முக பிரியன் (69) இன்று மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்தவர் ஷண்முக பிரியன். 69 வயதாகும் இந்த மூத்த இயக்குநர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இயக்குநர் - திரைக்கதை ஆசிரியர் :
ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஷண்முக பிரியன். ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் வெற்றிவிழா, பிரம்மா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியுள்ளார். ஒரு காலத்தில் இவர் எழுதிய திரைக்கதை என்றால் அப்படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் தமிழ் சினிமாவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷண்முக பிரியன் காலமானார் :
உடல் நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இயக்குநர் ஷண்முக பிரியன் மாரடைப்பால் இன்று காலமானார். இவருடைய இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மூத்த இயக்குனரின் இழப்பு திரையுலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





















