மேலும் அறிய

Mayilsamy: "மக்களின் இதயங்களை வென்ற மகா கலைஞன்.." யார் இந்த மயில்சாமி..?

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மயில்சாமி மாரடைப்பால் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவருமானவர் மயில்சாமி. வடிவேலு மற்றும் விவேக் ஆகியாருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர் மயில்சாமி. இன்று காலை இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மயில்சாமி?

மயில்சாமி கடந்த 1965ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அதாவது காந்தி ஜெயந்தியன்று பிறந்தவர். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகும். நகைச்சுவை நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர கதாபாத்திரம், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட மயில்சாமிக்கு சிறுவயது முதலே நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்தது.

Mayilsamy:

1984ம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தாவணி கனவுகள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கூட்டத்தில் ஒருவராக மயில்சாமி தோன்றினார். பின்னர், 1985ம் ஆணடு கன்னி ராசி படத்தில் டெலிவரி பாயாக நடித்தார். 1989ம் ஆண்டு கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனின் நண்பராக நடித்தார். அதே ஆண்டு கமல்ஹாசனின் வெற்றி விழா படத்தில் குஷ்புவின் சகோதரராக மயில்சாமி நடித்திருப்பார்.

ரஜினி முதல் லெஜண்ட் சரவணன் வரை:

ரஜினிகாந்தின் பணக்காரன் படத்தில் தொழிற்சாலை ஊழியராக நடித்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலின் நண்பராக நடித்திருப்பார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் நண்பராக அவர்களது படங்களில் சிறிய, சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Mayilsamy:

2000ம் ஆண்டுக்கு பிறகு காமெடி ஜாம்பவான்களாகிய விவேக் மற்றும் வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்தார். பின்னர், இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. குறிப்பாக, பாளையத்தம்மன் படத்தில் விவேக்குடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போலி சாமியாராக இவர் நடித்த காமெடி பட்டி தொட்டியெங்கும் பிரபலம். சூர்யாவின் உன்னை நினைத்து படத்தில் தங்கபஷ்பம் சாப்பிட்டு நிறம் மாறும் காமெடியும் மிகவும் பிரபலம்.

காமெடி கிங்:

2002ம் ஆண்டு வெளியான தூள் படத்தில் விவேக்கிடம் திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி போடச் சொல்லியுள்ளனர் என்று இவர் அடிக்கும் லூட்டி இன்றளவும் மிகவும் பிரபலம். சிவாஜி படத்தில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகவும், பாய்ஸ் படத்தில் ஐ யம் வேணு கோபால் ஃப்ரம் டைட்டல் பார்க் என்று இவர் அடிக்கும் காமெடிக்கு சிரிக்காத ஆளே இல்லை என்று கூறலாம். தலைநகரம் படத்தில் வடிவேலுவை பார்த்து இவர் நீ நடிகன்டா என்று சொல்லும் காமெடி இன்றும் பல மீம்களுக்கு டெம்ப்ளேட்டாக உள்ளது.

Mayilsamy:

கமல்ஹாசனுக்கு நண்பராக நடித்த மயில்சாமி தனுஷிற்கும், சிம்புவிற்கும் நண்பராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தேவதையை கண்டேன் படத்தில் தனுஷின் நண்பராக ஹீரோயினுக்கு முன்பு  கோமணத்துடன் நின்று கொண்டு போன் பேசும் காமெடி நாம் படிக்கும்போது கூட சிரிப்பை ஏற்படுத்தும். 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓரிரு படங்களில் நடித்து வந்த மயில்சாமி 2000ம் ஆண்டு முதல் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் என்பதே உண்மை. அதற்கு முன்பு வரை வருடத்திற்கே 5 படங்கள் வரை சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் 2000ம் ஆண்டு முதல் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் கதாநாயகர்களுடன் இணைந்து வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், விவேக் மற்றும் வடிவேலுவுடன் தவிர்க்க முடியாத கூட்டணியும் வைத்து அசத்தினார். எல்.கே.ஜி. படத்தில் தோனி பற்றி இவர் பேசும் வசனம் தோனியின் பெருமையை பேச இன்றும் அந்த காட்சியைத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் பயன்படுத்துகின்றனர். 

அரசியல் களம்:

பாக்கியராஜ் படம் மூலமாக அறிமுகமான மயில்சாமி தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், கெளதம் கார்த்திக், அதர்வா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், லெஜண்ட் சரவணன் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் முக்கிய கதாபாத்திரங்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்நாடு மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துள்ளார். லெஜண்ட் படத்தில் நடித்த பிறகு உடன்பால் என்ற படத்தில் கடைசியாக அவர் நடித்துள்ளார். 

1996ம் ஆண்டு மர்மதேசம் தொடரில் சன் தொலைக்காட்சியில் நடித்த மயில்சாமி, 2019ம் ஆண்டு நடந்த லொள்ளுப்பா நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி அசத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். கொரோனா பேரிடர் காலத்தில் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget