‛ஹிரித்திக் மற்றும் விக்கி கெளசலை ரொம்ப பிடிக்கும்’ - ஓப்பனாக பேசிய தமன்னா!
பாப்லி பவுன்சர் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர்களை பற்றி பேசிய தமன்னா
இந்திய சினிமா உலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தமன்னா பாட்டியா. தனது 15 ஆவது வயதிலேயே சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் ஸ்ரீ படத்தில் நடித்தார். கேடி படத்தில் நெகடீவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு, வியாபாரி, கல்லூரி படிக்காதவன் என தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
View this post on Instagram
தற்போது, பாப்லி பவுன்சர் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மதுர் பந்தார்கர் இயக்கிய இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. ட்ரைலர் வெளியீட்டு விழாவில், நடிகை தமன்னா, ஹிரித்திக் ரோஷன் மற்றும் விக்கி கெளசலை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.
View this post on Instagram
“ஹிரித்திக் மற்றும் விக்கியின் ஒருநாள் பவுன்சராக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றும் கூறினார். இந்த படத்தில் இதுவரை நடிக்காத புது கதாப்பாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். கொஞ்சம் காமெடி கொஞ்சம் ரியாலிட்டி என இரண்டும் சேர்ந்த ஃபீல் குட் படமாக பாப்லி பவுன்சர் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே இந்த படத்தின் கதை.
இப்படம் வரும் செப்டம்பர் 23 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும்.அதுபோக லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தமன்னா நடிக்கவுள்ளார்.