Surya thanks MK Stalin: வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன் - முதல்வரின் பாராட்டுக்கு சூர்யாவின் நன்றி!
சென்னை: ஜெய் பீம் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் அமேசானில் நாளை வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
அதேபோல் இப்படத்தின் சிறப்பு காட்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த முதலமைச்சர் படக்குழுவை பாராட்டி வாழ்த்து செய்தியும் வெளியிட்டிருந்தார்.
அந்த வாழ்த்து செய்தியில் கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.
இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்… 🙏🏼 https://t.co/48vBWpdjGm
— Suriya Sivakumar (@Suriya_offl) November 1, 2021
இந்நிலையில் முதலமைச்சரின் வாழ்த்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Videos | Halloween 2021 | பேயாக மாறிய பிரபலங்கள்! களைகட்டும் ஹாலோவீன் கொண்டாட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை அடுத்த 2 தினங்களுக்கு, இரவு 12 மணி வரை நீடிப்பு