மேலும் அறிய

surya 45: அரிவாளுடன் வேட்டையாடும் சூர்யா.. விடாது "கருப்பு" போல துரத்தும் சர்ச்சை.. ரசிகர்கள் கொந்தளிப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 45 படத்தின் தலைப்பு வெளியான நிலையில், படத்தின் தலைப்பில் அரசியல் குறியீடு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படத்தின் டைட்டில் இன்று காலை வெளியானது. படத்தின் போஸ்டரை பார்த்ததுமே ஒரு சிலர் இதில் அரசியல் குறியீடு இருப்பதாக பேசத் தொடங்கி விட்டனர். எப்போதும் சூர்யா படம் வெளியாகும் போது பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்திப்பது வழக்கமாகிவிட்டது. கங்குவா படத்தை பார்த்த பலர் இப்படத்தையா பார்க்க வந்தோம் என்ற அளவிற்கு கடுமையாக விமர்சித்திருந்தனர். அதேபோன்று ரெட்ரோ படம் வெளியான போதும் இதே பிரச்னை வெடித்தது. 

சூர்யா 45 பட தலைப்பு

ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும்போதே சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.  இந்நிலையில், சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. . இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் அறிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், கையில் பெரிய அரிவாளுடன் வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி சூர்யா நிற்கிறார். அதன் பின்னணியில் அய்யனார் குதிரை மீது வீற்றிருக்கும் சிலை உள்ளது. இந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். ரெட்ரோ படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் கருப்பு படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சூர்யா. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கார்டிலேயே அரசியல் கட்சியின் நிறம் இருப்பதாக ஒரு குரூப் திடீரென விமர்சிக்க தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

மீண்டும் வெடித்த சர்ச்சை

சூர்யா நடிக்கும் படங்கள் வெளியானாலே சர்ச்சைதானா என்கின்ற அளவிற்கு பேசுபோருளாக மாறி வருகிறது. ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் தந்தை சிவகுமார் சிக்ஸ்பேக் குறித்து பேசியது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து பலவித பிரச்னைகளும் எழுந்தன. சூர்யா வாடிவாசலில் எப்போது நடிப்பார் என தொடங்கி கங்குவா முதல் சூர்யாவின் ஒவ்வொரு படத்திற்கும் தலைவலியை சந்தித்து வருகிறார். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசம் படத்தின் தலைப்பு கருப்பு என பெயரிட்டது ஒரு கட்சியின் சித்தாந்தத்தை குறிப்பதாகவும், படத்தின் போஸ்டர் சிவப்பு நிறத்திலும் இருப்பதாகவும் பேசி வருகின்றனர் நெட்டிசன்கள். இவர்கள் நெட்டிசன்களா அல்லது ஒரு மதத்தின் கட்சியை சார்ந்தவர்களா என்றும் அவரது ரசிகர்கள் போட்டு பொளக்க தொடங்கிவிட்டனர். 

சூர்யாவை விட்டு விடுங்கள்

தற்போது படத்தின் டைட்டில் தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் படம் வெளியாக நாள் இருக்கிறது. அதற்குள் அரசியல் பிரச்னைகளை கிளப்பி சூர்யாவை வம்புக்கு இழுக்காதீர்கள் என அவரது ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் ரெட் ஜெயண்ட் இப்படத்தை வாங்காத போதும் இதில் அந்த குறியீடு இருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். சூர்யாவை அரசியலுக்குள் கொண்டு வர ஒரு குரூப் முயற்சிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. கருப்பு என்பது தமிழரின் அடையாளம். அதில் என்ன அரசியல் இருக்க போகிறது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Trisha : இந்த வந்திருச்சுல...த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
Trisha : இந்த வந்திருச்சுல...த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
Tata Tigor Facelift: மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Skoda Kodiaq RS: அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
Embed widget