மேலும் அறிய

Survivor Tamil | வேடர் லீடருக்கு பதவிக்கு கடும்போட்டி.. Why Not Me - கோதாவில் குதிக்கும் ஆர்.ஜே பார்வதி

வெள்ளை முத்து சிலம்பை எடுத்ததால், காயத்ரி எலிமினேட் ஆனதாக அறிவித்தார் அர்ஜுன். காயத்ரியும், இந்திரஜா, ஸ்ருஷ்டி இருக்கும் தனித்தீவுக்கு போவாரா? என காத்திருந்தோம்

பரபரப்பாக சூடுபிடிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் ஷோ நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று நிகழ்ச்சியில், காடர் அணிக்கு ட்ரைபல் பஞ்சாயத்தை தொடங்குவதற்கு முன்பு அர்ஜுன் அனைவரையும் தீப்பந்தம் ஒன்றை எடுத்து பொருத்திக்கொள்ளுமாறு சொல்கிறார். தீ தான் ஆதாரம் என்கிறார். பஞ்சாயத்தை தொடங்கி காயத்ரியை முதலில் பேசச் சொன்னபோது, ராம்தான் தோல்விக்கு காரணம் என்பதை சொல்லி உறுதி செய்கிறார். ராம் முழு தோல்வியும் என்னால் ஏற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டார். டீமுக்குள்ளேயும் திட்டம் இல்லை. அதை நானும் சொல்லவில்லை என இப்படியும் அப்படியும் பேசினார் ராம். ”ஏன் அன்னைக்கு டீம் பாசிட்டிவ்னு சொன்னீங்க, ஏன் இன்னைக்கு எல்லாமே நெகட்டிவ்னு சொல்றீங்கன்னு” அர்ஜுன் கேட்க ஆரம்பித்தார். தனக்கு எதிராக கதை கட்டுவதாக ராமும், தேவையில்லாத விஷயங்களை பேசி கம்பி கட்டுற கதையைப் பேசுவதாக உமாபதியும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொண்டனர். விக்ராந்த் எல்லாரையும் தான் எப்படி கூல் செய்தேன் என சொல்லிக் கொண்டிருந்தார்.

நீ இருப்ப நாங்க இருப்போமா... விஜயலஷ்மி சுருக்

காயத்ரி தேவையில்லாத கோபங்களைக் காட்டுவதாகவும், ராம் தனியாகவே சோலோ பெர்ஃபாமன்ஸ் கொடுப்பதாகவும் விஜயலட்சுமி விமர்சித்தார். கோபப்படுவது மனித இயல்புதான் என்றும், மீண்டும் வந்து நான் சமாதானம் ஆகிவிட்டதாகவும் காயத்ரி தன்னை நியாயப்படுத்த முயன்றார். இவர் அனைத்தையும் புரிந்துகொள்ளும் வரை இந்த டீமில் எத்தனை பேர் இருப்போம் என தெரியாது. எல்லா நிமிடங்களும் முக்கியம் என்றார். (நீ இருப்ப.. நாங்க இருப்போமா Mode) காயத்ரிக்கு ஒரு லீடராக மார்க் கொடுக்கச் சொன்னால் என்ன கொடுப்பீர்கள் என கேட்டதற்கு, ”விஜயலட்சுமி 3 மார்க்கும், உமாபதி 5 மார்க்கும், லேடி கேஷ் 6 மார்க்கும், சரண் 5 மார்க்கும், விக்ராந்த் 3 மார்க்கும், ராம் 5 மார்க்கும் (ராம் மார்க் போட்டபோது, அடப்பாவி லுக் கொடுத்த காயத்ரி) கொடுத்தனர்.

யார் சொன்னா? அவனே சொன்னான்

 

இந்திரஜாவை நாமினேட் செய்தது சரியா என அர்ஜுன் கேட்டபோது, இந்திரஜா எல்லா வேலையும் செய்ததாக சொன்னார் விக்ராந்த். சின்ன பொண்ணா இருந்துக்கிட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கிறதே பெரிய விஷயம், இந்திரஜாவை அனுப்பியிருக்கக்கூடாது என்றார் விஜயலஷ்மி, லேடி கேஷ் காயத்ரியின் காலை வாராமல் கொஞ்சம் சமாளித்தார். சரண் பேசும்போது, நான் லீடரானால் ராமைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என்றார். கடைசியில் என்னைத்தான் நாமினேட் செய்திருக்கவேண்டும். இந்திரஜாவை அல்ல என ராமே சொல்லிவிட்டார்.

வெள்ளை முத்துக்கள் கொடுத்த தீர்ப்பு

அர்ஜுன் ஆணையிட அனைவரும் எலிமினேஷன் வாக்கை செலுத்தினார்கள். 4 வாக்குகள் காயத்ரியை வெளியேற்றும் முடிவைக் கொடுத்திருந்தது. கடைசியான வாய்ப்பாக, அப்போது தங்க முத்துக்கள் கொண்ட சிலம்புகளையும், வெள்ளை முத்துக்கள் கொண்ட சிலம்புகளையும் வைத்த குடுவையில் இருந்து வெள்ளை முத்து சிலம்பை எடுத்ததால், காயத்ரி எலிமினேட் ஆனதாக அறிவித்தார் அர்ஜுன். 

Survivor Tamil | வேடர் லீடருக்கு பதவிக்கு கடும்போட்டி.. Why Not Me - கோதாவில் குதிக்கும் ஆர்.ஜே பார்வதி

ப்ரோமோ 1

காயத்ரியும், இந்திரஜா, ஸ்ருஷ்டி இருக்கும் தனித்தீவுக்கு போவாரா, அல்லது வீட்டுக்குப் போவாரா என காத்திருந்தோம் இல்லையா? இன்று ப்ரோமோ 1-இல் காயத்ரிக்கும், ஸ்ருஷ்டிக்கும் தனித்தீவில் டாஸ்க் நடத்தப்படுவதாக காட்டப்படுகிறது. இந்திரஜா வழக்கம்போல மோட்டிவேட் செய்ய, காயத்ரியும், ஸ்ருஷ்டியும் தீயாய் போட்டியில் இறங்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

ப்ரோமோ 2

ப்ரோமோ -2 வேடர் கூடாரத்திலும் சூடுபிடிக்கிறது காட்சிகள். அடுத்த ட்ரைப் லீடர் யாராக இருக்கப்போகிறார்கள் என லஷ்மிப்ரியா கேட்க, மெஜாரிட்டி வேடர்கள் ஐஷ்வர்யாவைக் கை காட்டுகிறார்கள். வழக்கம்போல கடுப்பான பார்வதி “பார்வதி என்னதான் க்ரேஸியா பண்ணாலும் ஓக்கே சொல்றீங்க. என்னை ஏன் ஒத்துக்கமாட்டேங்குறீங்க.. Why Not Me? என கேள்வி கேட்கிறார்.

இன்றைக்கு அனேகமாக வேடர் ட்ரைபில்தான் கண்டெண்ட் காத்திருக்கிறது மக்களே..

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget