Survivor | ஹனிமூனுக்காடா வந்தோம்னு கேள்வி.. ராமுக்கு அடி.. பறக்கும் காதல் வேவ்ஸ்.. பரபரக்கும் சர்வைவர்
இருவரும் 2 நிமிடங்களுக்கு தாக்குப்பிடித்ததால், கெத்து காட்டினார்கள். இனிகோ வேடர்கள் அணிக்கும், வனேசா காடர்கள் அணிக்கும் வந்தார்கள்.
சர்வைவர் 20-இல் புதுவரவாக இனிகோ பிரபாகரும், வனேசாவும் நுழைந்தார்கள். இரண்டு ட்ரைபுக்கும் விசிட்டராக வந்தவர்கள் எல்லோருக்கும் அறிமுகமானார்கள். முக்கியமாக, இருவர் புதுசா ஃப்ரெஷ்ஷா வந்து எங்க கூட போட்டி போடுறது கஷ்டமாதான் இருக்கு என்று வெளிப்படையாகவே பேசினார்கள் (இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு) இனிகோ பிரபாகர், வேடர்களின் உணவைச் சாப்பிட்டபோது, நல்லாவே இல்லையென்றாலும் நல்லாதான் இருக்கு என்னும் ரேஞ்சில் சாப்பிட்டார். பின்னால் கேமராவுக்கு கொடுத்த பைட்டில்தான் உண்மையைச் சொன்னார். நல்லா இல்லை ப்ரோ என்று. சாப்பிட்டு முடித்து, எல்லோருக்கும் இளநீர் பறித்துக்கொடுத்தார். புதுசாக எண்ட்ரி கொடுத்து இளநீரைப் பறித்து கொடுத்து, மனசையும் பறித்துவிட்டார் இனிகோ.
இன்றைக்கு எபிசோடில் இனிகோவும், வனேசாவும் ஆணி படுக்கை மீது நிற்கும் டாஸ்க்கை எதிர்கொண்டார்கள்.ராமுக்குத்தான் பாவம் கொடூரமான அடி. இருவரும் 2 நிமிடங்களுக்கு தாக்குப்பிடித்ததால், கெத்து காட்டினார்கள். இனிகோ வேடர்கள் அணிக்கும், வனேசா காடர்கள் அணிக்கும் வந்தார்கள்.
ஒரு பெரிய மரப்பந்தை தள்ளும் போட்டி காடர்களுக்கும் வேடர்களுக்கும் நடந்தது. வேடர்கள் இருமுறையும் ஜெயித்தார்கள்.
View this post on InstagramView this post on Instagram
லஷ்மி ப்ரியாவுக்கு வேடர்களுடன் ஒரு விஷயம் அசெளகரியமாக இருந்தது. ஐஷ்வர்யாவே எதுக்கு டாஸ்க் பண்றாங்க. நான் பண்ணக்கூடாதா. எல்லாமே அவங்கதான் நல்லா பண்ணுவாங்களா என்றார்.