Etharkkum Thunindhavan: அடடே.. இதுலயும் இவர்தான் வாய்ஸா.. பேன்ஸூக்கு பக்கா ட்ரீட்.. டாப் கியரில் சூர்யா..!
படத்தின் பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் 40 தாவது படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை ‘வம்சம்’, ‘கடைகுட்டி சிங்கம்’ ‘நம்ம வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப்படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
புதிய அப்டேட்
படத்தின் பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன அப்டேட் என்றால், தெலுங்கு மொழியில் சூர்யா டப் செய்திருப்பது. இது தொடர்பான பதிவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
A pakka treat for Telugu fans 💥@Suriya_offl dubs in his own voice for the telugu version of #ET!@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #ఈటి pic.twitter.com/TvYKH18wOi
— Sun Pictures (@sunpictures) February 12, 2022
U/A சான்றிதழ்
தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியிருக்கும் இந்தப் படத்தின் நீளம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகனன் நடித்துள்ளார். இது மட்டுமன்றி ரெடிங் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ், வினய், சரண்யா பொன்வன்னண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள்,டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக “வாடா தம்பி” பாடலும், இராண்டாவதாக பாடலாக உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘சும்மா சுர்ரூனு’ பாடல் வெளியானது. இந்தப் பாடலை பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.