மேலும் அறிய

Kanguva Song Shooting: லியோ படத்துக்கு டஃப் கொடுக்கப் போகும் ‘கங்குவா’ டீம்.. பதற்றத்தில் விஜய் ரசிகர்கள்..

நா ரெடி பாடலில் 2000 நடனக்கலைஞர்கள் உபயோகிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கங்குவா படப்பாடல் 1500 நடனக் கலைஞர்களுடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

‘நா ரெடி’ பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில், நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படக்குழு அப்பட பாடல் ஒன்றுக்காக தயாராகி வருகிறது.  சிறுத்தை சிவா இயக்கத்தில், யூவி கிரியேஷன்ஸ் - ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யா தற்போது முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார்.

சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா, பிரம்மாண்ட பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.  ஃபேண்டஸி கதையாகத் தயாராகி வரும் கங்குவா படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகைகள் திஷா பதானி, மிருணாள் தாக்கூர் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரம்மாண்ட செட் அமைத்து அங்கு வரலாற்றுக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ படப் பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கங்குவா படப்பாடலின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நா ரெடி பாடலில் 2,000 நடனக்கலைஞர்கள் உபயோகிக்கப்பட்டிருந்ததாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கங்குவா படப்பாடல் 1500 நடனக் கலைஞர்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பாடலுக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலைக் கேட்டு விஜய் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கங்குவா படக்குழு சூர்யாவின் முகத்தையே இதுவரை காண்பிக்காமல் சஸ்பென்ஸ் கடைபிடித்து வரும் நிலையில், முன்னதாக சூர்யாவின் முகத்துடன் AI வடிவமைத்த கங்குவா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் முன்னதாக இணையத்தில் வைரலாகின.

மேலும், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு கங்குவா படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை முன்னதாகக் கைப்பற்றியுள்ளது.  முன்னதாக கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கங்குவா பட ஷூட்டிங் நடைபெற்றது.

கங்குவா படத்தின் ப்ரொமோ இந்த மாதம் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ப்ரொமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து கங்குவா திரைப்படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget