VIRUMAN| ‘ஐயம் வெரி ஹேப்பி ‘ விருமன் படம் குறித்து கார்த்தி உற்சாக ட்வீட்
அவள் தனது அறிமுக படத்திற்கு தயாராகிவிட்டால், அவளுக்கு ரசிகர்களின் அன்பு மழை கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஷங்கர்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார் அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை கையில் எடுத்துள்ளார் முத்தையா. படத்திற்கு ‘விருமன்’ என பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக கமிட்டாகியுள்ளார். கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
படத்தின் நாயகி அதிதியை “ மனப்பூர்வமாக உன்னை வரவேற்கிறேன்! அதிதி ஷங்கர். கடவுளின் ஆசிர்வாதம் உனக்கு கிடைக்கட்டும், நீ அனைவரின் இதயங்களையும் வெல்ல போகிறாய்! உன் வரவு நல்வரவு ஆகுக!” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஷங்கர் “ 2டி எண்டர்டைன்மெண்ட்” போன்ற தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனம் மூலமாக எனது மகள் அறிமுகமாவது மகிழ்ச்சி , அவரை அறிமுகப்படுத்திய சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி , அவள் தனது அறிமுக படத்திற்கு தயாராகிவிட்டாள், அவளுக்கு ரசிகர்களின் அன்பு மழை கிடைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Thanks dear @Suriya_offl & Jyothika for launching @AditiShankarofl @2D_ENTPVTLTD which always delivers quality movies!
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 5, 2021
Thanks to @Karthi_Offl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian
I believe cinema lovers will shower her with love as she comes fully prepped to make her debut. https://t.co/1h8almVW9z
2015 ஆம் வெளியான கொம்பன் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் கார்த்தி முத்தையா கூட்டணி, ஷங்கர் மகள் அறிமுகம் என ’விருமன்’ படத்திற்காக ஹைப் எகிறியிருக்கிறது. படம் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் கார்த்தி ‘மண் சார்ந்த கதைகள் என்றுமே என் மனதிற்கு நெருக்கமானவை. அதிலும் மீண்டும் முத்தையாவுடனும், யுவனுடனும் இணைவது பெரும் மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார்.
மண் சார்ந்த கதைகள் என்றுமே என் மனதிற்கு நெருக்கமானவை. அதிலும் மீண்டும் முத்தையாவுடனும், யுவனுடனும் இணைவது பெரும் மகிழ்ச்சி!#Viruman #விருமன் https://t.co/TLYoqXKbQB
— Actor Karthi (@Karthi_Offl) September 5, 2021
விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்