மேலும் அறிய

Suriya Daughter Diya: ”கண்ணான கண்ணே..” : சூர்யா மகள் வெளிநாட்டுல படிக்கிறாங்களா? சூர்யா சொன்ன வாவ் அப்டேட்..

Suriya Daughter Diya: நடிகர் சூர்யாவின் மகள் உயர்கல்விக்காக நியூயார்க் சென்றுள்ளதாக விருமன் பட இசை வெளியீடு நிகழச்சியில் சூர்யா தெரிவித்துள்ளார்.

Suriya Daughter Diya: நடிகர் சூர்யாவின் மகள் உயர்கல்விக்காக நியூயார்க் சென்றுள்ளதாக விருமன் பட இசை வெளியீடு நிகழச்சியில் சூர்யா தெரிவித்துள்ளார். 

நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள படம் விருமன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று (03/08/2022) மிகவும் ஆரவாரத்தோடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, ”எனக்கு தேசிய விருது வழங்கப்பட்ட போது அதை நான் உணரவே சில மணிநேரங்கள் எடுத்துக் கொண்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நான் எனது மகளுடன், அவரின் உயர்கல்விக்காக நியூயார்க்கில் இருந்தேன். ஒரு நாற்பது நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். என்னைவிட எனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை உங்களுக்கு வழங்கப்பட்ட விருதாக கருதி மிகவும் கொண்டாடியது நீங்கள் தான்’’ என பேசினார். சூர்யாவின் பேச்சில் இருந்து அவரது மகள் தியா நியூயார்க்கில் படிக்கவிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

முத்தையா இயக்கி, நடிகர் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதி ராஜா, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, விருமன் படத்தின் நடிகர் கார்த்தி நடிகை அதிதி, நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டனர். 

படத்தின் முதல் சிங்கிள் டிராக் ’கஞ்சாபூவு கண்ணால’ பாடல்  ஏற்கனவே யூடூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.

முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Embed widget