ரஜினி, கமல் படத்தின் உரிமத்தை விட அதிக விலை போன ‛சூர்யா 42’
படப்பிடிப்பு முடியும் முன்னரே விற்றுப்போன சூர்யா 42 படத்தின் ஹிந்தி உரிமம்
சிறுத்தை சிவாவுடன் இணைந்து சூர்யா நடிக்கவிருக்கும் ”சூர்யா 42” படத்தின் ஹிந்து உரிமை விற்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சமயத்தில், பலரும் இதை ட்ரால் செய்தனர். அதுவும் இதன் பின்ணனி இசை கே.ஜி.எஃப் படத்தின் மியூசிக் போல் உள்ளது என்றும் கூறினர். 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் பான் இந்திய படம் இது என்ற செய்தியும் வந்தது. வரலாற்று கதை என்பதால், இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளது. சிலர் இது கோச்சடையான் போல் உருவாகும் அனிமேஷன் படமாக இருக்கும் என்ற கருத்துக்களையும் வெளியிட்டனர். ஆனால், அந்த குழப்பத்தை தவிர்க்கும்படி, இது ஒரு முப்பரிமாண படம் என்ற அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
#Suriya42 Hindi Rights Sold For Whopping Price & It's Also Equal To Rajini,Kamal Movie Rights Value.👑🔥
— Online Suriya Fans Team™ (@OnlineSuriyaFT) October 3, 2022
Biggest Blockbuster Loading...⏳@Suriya_offl #EtharkkumThunindhavan #VaadiVaasal pic.twitter.com/vS3WijZQJj
தற்போது, இப்படத்தின் ஹிந்தி உரிமம் விற்கப்பட்டுள்ளது. அதுவும் ரஜினி, கமல் ஆகிய ஹீரோக்களின் உரிமத்தை விட அதிக பண அளவில் விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் ட்விட்டர் பக்கத்தில் பரவி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைப்பெற்று வருகிறது. முதல் நாள் ஷூட்டிங் போட்டோவை நடிகை திஷா பத்தானி அவரின் இன்ஸ்டா பக்கதில் வெளியிட்டார். அதற்கு பிறகு, படத்தின் குழுவினர் படப்பிடிப்பு காட்சிகள் எதையும் ஷேர் செய்ய வேண்டாம். படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் வகையில் அது அமையும் என்று கேட்டுக்கொண்டனர்.
View this post on Instagram
சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா இந்த பிராமாண்ட படைப்பை உருவாக்கவுள்ளார். சிங்கம் படத்திற்கு பிறகு, பல வருடங்களுக்குப் பின் சூர்யா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மேலும் படிக்க : PS 1 Box Office Collection: ‛சோழர் கொடி பறக்கிறது...’ ரூ.200 கோடியை தாண்டிய வசூல்!