மேலும் அறிய

Vanangaan: பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் பஞ்சாயத்து.. பழுத்தது துணை நடிகையின் கன்னம்.. ரசிகர்கள் அதிர்ச்சி 

இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கையாளும் முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். அவர் தனது வர்மா படத்திற்கு பிறகு தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாக்கும் இடையே மோதல் நடந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. கதையில் நடந்த சில மாற்றங்களால் சூர்யா விலகியதாக இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

Vanangaan: பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் பஞ்சாயத்து.. பழுத்தது துணை நடிகையின் கன்னம்.. ரசிகர்கள் அதிர்ச்சி 

இதற்கிடையில் வணங்கான் படப்பிடிப்பை தொடங்க பாலா தீவிரம் காட்டி வந்தார். அதன்படி இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யும், ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷூம் நடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. 

இதற்காக கேரளாவில் இருந்து ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு துணை நடிகர், நடிகைகளை வணங்கான் படப்பிடிப்பில் பங்கேற்க வைத்து வருகிறார். அப்படி வந்தவர்களில் துணை நடிகை லிண்டாவும் ஒருவர். மொத்தம் 3 நாட்களுக்கு 9   துணை நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக ரூ.22, 600-ஐ ஜிதின் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனைக் கேட்கப் போன லிண்டாவை அவர் கடுமையாக தாக்கியுள்ளார். 

இதில் கன்னத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சைப் பெற்றார். தொடர்ந்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget