மேலும் அறிய

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் அடுத்த பிரபலம்: திரை பிரபலங்கள் அதிர்ச்சி

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிரபல துணை நடிகர் மாயி சுந்தர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிரபல துணை நடிகர் மாயி சுந்தர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ரன், துள்ளாத மனமும் துள்ளும், மிளகாய், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மாயி சுந்தர். கடந்த 8 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த மாயி சுந்தர் மண்ணார்குடியில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதற்கு முன்னதாக, மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு  திரைப்படங்களில் நடித்திருந்தார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின்  நண்பராக கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தின் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கிட்னியில் பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலாமானார். நடிகர் ஹரிவைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரிவைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
 
நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த ஹரிவைரவனின் மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்துவரும் நிலையில் வாழ்வாதரமாக இருந்துவந்த ஹரி வைரவனின் மறைவால் செய்வதறியாது நிற்கிறார். தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரிவைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
நடிகர் ஹரிவைரவன் காலமான நிலையில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குநர்  பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்ட நடிகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நடிகர் சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் “இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்ப த்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி” என தனது வேதனையை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget