மேலும் அறிய

Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?

Tamilnadu Rain: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை மற்றும் பனி பொழிவு நிலவி வரும் நிலையில் மழை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் அடுத்தடுத்து மூன்று புயல்கள் உருவானது. இந்த 3 புயல்களும் ஆந்திரா நோக்கியே சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்தது. தற்போது ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக இன்று தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை

அதேபோல் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. 

தென் தமிழகம் மழை வார்னிங்

நவம்பர் 30ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட்டுக்கு செக் !
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட் தலைக்கு வந்த செக் !
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
கண்ணீரை வரவழைத்த தாயின் பாசப் போராட்டம்! காண்போரை கலங்க வைத்த நெகிழ்ச்சிக் காட்சி!
கண்ணீரை வரவழைத்த தாயின் பாசப் போராட்டம்! காண்போரை கலங்க வைத்த நெகிழ்ச்சிக் காட்சி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Embed widget