மேலும் அறிய

ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2ஆம் பாகத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திற்கு தணிக்கை சான்றிதழ் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜெயிலர் 2 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படம் வருகிற 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரீலிசாகிறது. இதில், எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் வெஞ்சரமூடு, ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, வித்யா பாலன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எகிறும் எதிர்ப்பார்ப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தை போன்றே 2ஆம் பாகத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பிறமொழி சூப்பர்ஸ்டார்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் வெளியான 12 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இசை வெளியீட்டு விழா உட்பட புரோமஷன் பணிகள் பெருமளவில் நடைபெறவில்லை என ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லரால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

யு/ஏ சான்றிதழ்

ஜெயிலர் 2 படம் ரிலீசாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ரஜினியின் முந்தைய படமான கூலியில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதாக கூறி தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் கால அளவு கொண்ட படமாக திரைக்கு வரவிருக்கிறது. 

சோலோவாக போட்டி

வருகிற 15ஆம் தேதி ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வேறு எந்த படமும் போட்டிக்கு வரவில்லை. முன்னதாக, நடிகர் தனுஷின் ஓம் திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், சூபர்ஸ்டார் மீது உள்ள மரியாதை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, சோலோவாக ரிலீஸ் ஆகும் ஜெயிலர் 2 திரைப்படம் அதன் முதல் பாகம் ஈட்டிய 650 கோடி வசூல் சாதனையை முறியடித்து அதை விட அதிக வசூலை ஈட்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 

ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ரஜினியின் முந்தைய படங்களான வேட்டையன் மற்றும் கூலி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அதிலும், மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம் ரஜினி ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆகையால், ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக தற்போது உள்ளது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget