'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
இந்திய அளவில் ரூ.1009 கோடியையும், பிற நாடுகளில் ரூ.510 கோடி என மொத்தமாக ரூ.1519 கோடியை வசூலித்த ராமாயணா முதலாம் பாகம் திரைப்படம்

ராமாயணா முதலாம் பாகம் திரைப்படம் உலகளவில் ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ராமாயணா முதலாம் பாகம்
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ராமாயணா முதலாம் பாகத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டுடனும் பிரம்மாண்ட வடிவமைப்புகளுடனும் உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்திருந்தனர்.
2 வாரங்களில் ரூ.1519 கோடி வசூல்
ராமாயணா முதலாம் பாகம் திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி திரைக்கு வந்தது முதலே தனது வசூல்வேட்டையை ஆரம்பித்த நிலையில், தற்போது இரண்டே வாரங்களில் ரூ.1519 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்திய அளவில் இத்திரைப்படம் ரூ.1009 கோடியையும், பிற நாடுகளில் ரூ.510 கோடியையும் வசூலித்துள்ளது.
துரந்தர் காலி: புஷ்பா-2 தான் அடுத்த டார்கெட்!
ராமாயணா முதலாம் பாகம் அதிகவசூலை குவித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், ஏற்கனவே ரூ. 1350.83 கோடியை வசூலித்திருந்த துரந்தர் திரைப்பத்தின் வசூலை மிஞ்சி அதன் இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வருங்காலத்தில் அடுத்த இடத்தில் ரூ.1800 கோடியுடன் உள்ள புஷ்பா-2 மற்றும் ரூ.1852.44 கோடி வசூலித்த துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படங்களின் வசூலையும் கடக்குமென கணிப்புகள் வெளியாகி உள்ளன. ராமாயணா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2028-ஆம் ஆண்டு வெளியாகக்கூடுமெனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























