Rajinikanth: 50 ஆண்டுகால சினிமா பயணம்.. ரஜினிக்கு கிடைக்கப்போகும் கௌரவம்!
ஆக்ஷன், ஸ்டைல், காமெடி ஆகியவை மூலம் தனக்கென தனியிடம் பிடித்த ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவரை கௌவரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ரஜினிகாந்த். ஆக்ஷன், ஸ்டைல், காமெடி ஆகியவை மூலம் தனக்கென தனியிடம் பிடித்த ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 75 வயதை கடந்த நிலையிலும் திரையுலகில் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த், இதுவரை 171 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து தனக்கென தனியிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆன்மிகத்திலும் மிகப்பெரிய நாட்டம் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் இன்றளவும் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
கௌரவப்படுத்தப்படும் ரஜினிகாந்த்
கோவா மாநிலத்தில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு விழாவில் ரஜிwனிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் 13 ஹாலிவுட் படமும், 4 சர்வதேச படமும், 46 ஆசியாவைச் சேர்ந்த படங்களும் முதல்முறையாக திரையிடப்படுகிறது.
ரஜினியின் திரைப் பயணத்தை கௌரவப்படுத்துவது நிச்சயம் திரைப்பட விழாவின் ஹைலைட்டாக இருக்கும் என திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The Bond Beyond #Thalaivar173 #Pongal2027@rajinikanth @ikamalhaasan #SundarC #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/dwKmlzcVnX
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2025
ரஜினியின் அடுத்த படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஆகஸ்ட் மாதம் கூலி படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இது 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்படுகிறது.
அதேசமயம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஜினிகாந்த் இயக்குநர் சுந்தர் சி உடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். இதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. அருணாச்சலம் படத்திற்கு பிறகு ரஜினி - சுந்தர் சி காம்போ மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.





















