மேலும் அறிய

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் 12 பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் நாளை வெளியிடுகிறார்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இந்த மாபெரும் வெற்றிக் கூட்டணி ஜெயிலர் 2ஆம் பாகத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா, உள்ளிட்டோர்  முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, ஹிருத்திக் ரோஷன், மோகன்லால், சிவ ராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

 

படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வருகிற அக்டோபர் 15ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஜெயிலர் திரைப்படம் 650 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்த நிலையில், 2ஆம் பாகமும் புதிய வசூல் சாதனை படைத்து அசத்தும் என படக்குழுவினரும், ரசிகர்களும் எதிர்ப்பார்க்கின்றனர். 

ஜெயிலர் முதல் பாகத்தை போன்றே 2ஆம் பாகத்திலும் பிறமொழிகளின் திரைத்துறைகளை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளதால் திரையரங்கங்களில் இத்திரைப்படத்தை கண்டுக்களிக்க ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றனர்.

இதற்கிடையே, இத்திரைப்படத்தில் இருந்து 'அல்ல போலேலோ’, 'ஒன்சன் ஒன்மூன்' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், ஜெயிலர் 2ஆம் பாகத்தின் அனைத்து பாடல்களும் நாளை (செப்.30) வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில், ஜெயிலர் 2ஆம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 6 பாடல்களை சூப்பர் சுப்புவும், ஒரு பாடலை விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வழக்கமான ரஜினி திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா போன்று இம்முறை நடைபெறாது என்பதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். மாறாக கடந்த மாதம் வெளியான லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் இசை வெளியீட்டை போன்று குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் 2ஆம் பாகத்தின் பாடல்களை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயிலர் 2ஆம் பாகத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெறாததால் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்க முடியாமல் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget