சன்னி லியோன் உதட்டில் ஏற்பட்ட காயம்.. இதுதான் காரணமா? வைரலாகும் பதிவு..
பாலிவுட் திரையுலகின் பிரபலமான சன்னி லியோன் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு விநோதமான காரணத்தை குறிப்பிட்டு பதிவு செய்த போஸ்ட் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபலமானவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை பலரும் அறிந்ததே.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது தமிழிழும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பல படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தான் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
அவர் சமூக வளைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர். எப்போதும் ஏதேனும் ஒரு விஷயத்தை பதிவிட்டு வருவது அவரது வழக்கம். இந்நிலையில் தற்போது அவரது சமூக வளைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவரது உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த காயத்திற்கு ஒரு விநோதமான காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காயத்திற்கு காரணம் மொபைல் போன்.
View this post on Instagram
சன்னி லியோன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சி செய்த போது தொலைப்பேசி கையில் இருந்து தவறி விழுந்ததாகவும், அது உதட்டில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டத்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த காயத்தால் உதட்டில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு பலரும் பல தரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் தங்களுக்கும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி பதிலளித்துள்ளனர்.
Ajith Vs Vijay: ‘ஐயய்யோ..மறுபடியுமா?’ மீண்டும் போட்டாபோட்டிக்கு தயாராகும் விஜய் - அஜித் படங்கள்?