மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

Ethirneechal :ரேணுகாவை வம்புக்கு இழுக்கும் விசாலாட்சி அம்மா. வீர சங்கிலி போனில் குணசேகரன் பேசியதை கேட்டுவிட்ட தர்ஷினி. இன்று என்ன நடக்கப்போகிறது எதிர்நீச்சலில்? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 28) எபிசோடில் ஞானம் தன்னுடைய நிலையை நினைத்து நொந்து போய் பேசுகிறான். அண்ணன் தம்பி ஒன்றாக சேர்ந்து விட்டால் அதிலொருவர் மீண்டும் குணசேகரனாக மாறி விடுவார் என்பது தான் இந்த வீட்டு பெண்களின் எண்ணம் என சொல்லி அழுகிறான். கதிர் மிகவும் பாசமாக உரிமையுடன் ஞானத்திடம் பேசுகிறான். "அண்ணன் தம்பிக்குள் நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க உங்க தம்பிக்கு என்ன வேணாலும் செய்யுங்க. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க. இதுக்கு மேல இதை பத்தி பேசுனா தப்பாகிடும். இப்போ தயவு செய்து சாப்பிட வாங்க" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் நந்தினி.

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

அடுத்த நாள் குணசேகரன் தான் மறைமுகமாக ஒளித்து வைத்து இருக்கும் போனில் இருந்து வீர சங்கிலிக்கு போன் செய்கிறார். "என்னோட பிள்ளை எப்படி இருக்கு?" என கேட்கிறார். "நீங்க சொல்லி கொடுத்த மாதிரி அவங்க அம்மா தான் கடத்திவைச்சு இருக்கா அதுக்கு ஜீவானந்தம் தான் உடந்தைன்னு அன்னிக்கு வீடியோவுல பேசின மாதிரியே புலம்பிகிட்டு இருக்கு" என வீர சங்கிலி சொல்கிறான். திமிராக குணசேகரன் பேசுவதை கேட்டு கோபமடையும் வீர சங்கிலி எக்கச்சக்கமாக குடிக்கிறான்.

பின்னர் ஜான்சியையும், கரிகாலனையும் அவர் இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார். கரிகாலன் பயமாக குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறான். "நான் சொன்ன நீ வரணும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது. உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன். நீ தான் என் வீட்டு மாப்பிள்ளை" என சொல்லி கரிகாலனை தன்னுடன் அழைத்து செல்கிறார் குணசேகரன்.

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

வீர சங்கிலி குணசேகரன் மீது இருக்கும் கோபத்தை தர்ஷினி மீது காட்டுவதற்காக அவள் இருக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அங்கு தர்ஷினியை பார்த்து கொள்ளும் பெண் வீர சங்கிலியை அங்கிருந்து விரட்டி விடுகிறாள். தர்ஷினி பழைய மாதிரியே பயத்தில் புலம்புகிறாள். வீர சங்கிலி குடிபோதையில் தன்னுடைய செல் போனை அங்கேயே விட்டுவிட்டு போய் விடுகிறான்.

ரேணுகா வீட்டுக்கு திரும்பி வருகிறாள். கதிர் பாசமாக பேசுவதை பார்த்து ரேணுகா சந்தோஷப்படுகிறாள். உள்ளே நுழையும் போது விசாலாட்சி அம்மா ரேணுகாவை திமிராக அழைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியின் அப்பத்தா ரேணுகாவை பார்த்து "உங்க அம்மா என்ன பேச்சு பேசுனா? நல்லா அனுபவிக்கட்டும்" என திமிராக சொல்ல "போதும் நிறுத்துங்க. எல்லாரும் அனுபவிக்க தான் போறாங்க" என ரேணுகா சரியான பதிலடி கொடுத்துவிட்டு போகிறாள்.

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

ரேணுகாவிடம் ஞானம் வீட்டில் நடந்தை பற்றி சொல்லி வருத்தப்படுகிறேன். "பீஸ் கட்ட பணம் தானே கொடுத்தேன். இதுக்காக எல்லாரும் என்னை குணசேகரனா மாறிடுவேன்னு சொன்ன கஷ்டமா இருக்கு" என சொல்லி அழுகிறான். அவனை ரேணுகாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து சமாதான படுத்துகிறார்கள்.

வீர சங்கிலிக்கு போன் செய்கிறார் குணசேகரன். "டேய் வீர சங்கிலி நான் தான்டா குணசேகரன் பேசுறேன். பிள்ளைக்கு கல்யாண வேலை பண்ணிக்கிட்டு இருக்கேன். நானே வந்து அந்த பிள்ளையை கூட்டிட்டு போயிடுறேன்" என சொல்கிறார். இதை அனைத்தையும் மயக்கத்தில் இருந்த தர்ஷினி போனை எடுத்து கேட்டு விடுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget