Suhana Khan Agastya Dating : ஷாருக்கான் - அமிதாப் பச்சன் உறவுக்கரங்களா ஆகப்போறாங்களா? - தீயாய் பரவும் டேட்டிங் நியூஸ்
ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல் காட்டுத்தீ போல பாலிவுட் திரையுலகில் பரவி வருகிறது

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பாலிவுட்டின் பிரபலமான நடிகரின் வாரிசுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் காட்டுத்தீ போல சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட பழக்கம் :
ஷாருக்கான் மகள் சுஹானா கான் சமீபத்தில் தான் “தி ஆர்ச்சீஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சுஹானா கான் உடன் இணைந்து பல திரை வாரிசுகளும் நடித்திருந்தனர். அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் மற்றும் ஜான்வி கபூரின் சகோதரியான குஷி கபூர், தேவரங் ரெய்னா, அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, யுவராஜ் மெண்டா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிக்கும் சமயத்தில் சுஹானா கான் மாற்றும் அகஸ்தியா நந்தா இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்றும் அதற்கு பிறகு இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பாலிவுட் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
The latest couple in #Btown seems to be Shah Rukh Khan's daughter Suhana Khan and Shweta Bachchan's son Agastya Nanda. Rumour mills have been rife, hinting at the alleged romance since ages, but it now seems that the news is in fact true. #agastyananda #suhanakhan #shahrukhkhan pic.twitter.com/bLtc6bYT44
— Bangalore Times (@BangaloreTimes1) January 5, 2023
தயாரின் சம்மதம் :
மேலும் சுஹானா கான் மற்றும் அகஸ்தியா நந்தா இருவரும் டேட்டிங் செய்து வருவது அகஸ்தியாவின் தயாரான ஸ்வேதா பச்சனும் அறிவார் என கூறப்படுகிறது. அகஸ்தியா நந்தா தந்து தாயாரிடம் சுஹானாவை பார்ட்னர் என அறிமுகப்படுத்தியதாகவும் இவர்களின் உறவுக்கு அவரும் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது சம்மந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமான அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.
#InPhotos | #AliaBhatt, #RanbirKapoor, #SuhanaKhan, #AgastyaNanda, #KarismaKapoor and others attend the annual Kapoor family #Christmas lunch.
— The Quint (@TheQuint) December 25, 2022
See more: https://t.co/wz3g510Fqz pic.twitter.com/mvRth7oxhx
பிள்ளைகளால் ட்ரெண்டிங்கில் ஷாருக்கான் :
சினிமாவில் காலடி எடுத்து வைத்த உடனேயே காதலில் சிக்கிய ஷாருக் கான் மகள் ஒரு புறம் என்றால் அவரின் மகன் ஆர்யன் கானுக்கு வேறு விதமான சிக்கல். சமீபத்தில் ஆரியன் கான் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகி பின்னர் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















