STR51: 'God of Love'- சிம்பு நடிக்கும் 51-வது படத்தின் அப்டேட் வெளியானது!
STR51: சிம்பு நடிக்கும் 51-வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவின் 51-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் ‘God of Love' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#HBDSilambarasanTR
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#STR51 #AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_ @Dir_Ashwath@archanakalpathi… pic.twitter.com/aC0V10D2Qb— AGS Entertainment (@Ags_production) February 3, 2025
சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. 2023-ம் ஆண்டு சிம்பு நடித்த ‘ பத்து தல’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு படம் குறித்த அப்டேட் வெளியாவது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
5 திரைப்ப்டங்கள் இருக்கு..
‘மாநாடு’ திரைப்படத்தில் மிரட்டலான கம்பேக் கொடுத்தவர் சிம்பு. அதன் பிறகு வெளியான வந்து தணிந்தது காடு, பத்து தல. சிம்புவின் 47-வது படமாக வெளிவர இருப்பது கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் `தக் லைஃப்' தான். இதில் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
STR48- கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. இப்போது,Atman சினி ஆர்ட்ஸ் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள சிம்பு தனது 50 ஆவது படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கும் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு பெரிய கனவு என்று சிம்பு தெரிவித்துள்ளார். ATMAN CINE ARTSன் முதல் படம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜா இசை என இப்படத்தில் இணைந்துள்ளனர்.
`ஓ மை கடவுளே', `டிராகன்' படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து சிம்பு `STR 48' படத்தின் இயக்குநர். இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராம்குமார் இயக்கத்தில் சிம்புவின் ’STR 49’ படம் Dawn பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவர் பார்க்கிங் திரைப்ப்டத்தின் இயக்குநர்.
சிம்பு 51:
சிம்புவின் 51வது படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் காதல் திரைப்படமாக சிம்புவின் 51வது திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம். இதற்கான அறிவிப்பு போஸ்டரில் 'GOD of LOVe' என்ற டேக் லைன் போஸ்டரில் உள்ளது. “காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…?” என்ற அஜித்த்தின் தீனா திரைப்படத்தின் சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் 2026-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

