மேலும் அறிய

Star Box Office : வெற்றிபெற்ற கவினின் ஸ்டார்...மூன்று நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ

கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல் வெளியாகியுள்ளது

ஸ்டார்

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் (Star Movie) படம் கடந்த மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது ? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை. 

ஸ்டார் படத்தின் மூன்று நாள் வசூல்

டிரைலர் வெளியானது முதலே ஸ்டார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. திரையரங்குகளில் வெளியாகிய ஸ்டார் முதல் நாளிலேயே 3 கோடி வரை வசூல் செய்தது. இதனை அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் ஸ்டார் படத்தின் வசூல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் ஸ்டார் படம் 15 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் இளன்  

ஸ்டார் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கும் ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்திருக்கும் அன்பிற்கு இப்படத்தின் இயக்குநர் இளன் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஸ்டார் முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது. ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் .அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.

ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைத்தான். ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி . கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது .
- அன்புடன் இளன்“ என்று கூறியுள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
Embed widget