SSMB29 | விண்வெளி கதையை கையில் எடுத்த ராஜமௌளி ! அடுத்த பிரம்மாண்டம் ! ஹீரோ இவர்தான்!
இது குறித்த செய்திகள் முன்னதாக வெளியான நிலையில் ராஜமௌளியும் அதனை உறுதிப்படுத்தினார்.
பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர் எஸ்.எஸ்.ராஜமௌளி . இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ராஜமௌளி கெரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. பார்ப்பவர்களுக்கு ஒரு இடத்திலும் நெருடலை ஏற்படுத்தாமல் தத்ரூபமாக உருவான பிரம்மாண்டம் பாகுபலியை உலக சினிமாக்களே கொண்டாடின. இந்த நிலையில் அவர் அடுத்ததாக கையில் எடுத்திருக்கும் திரைப்படம்தான் ‘RRR' . ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி ஆர் காம்போவில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் ராஜமௌளி தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நடிகரும் , அதிக ரசிகர்களை கொண்டவர்களுள் ஒருவருமான மகேஷ் பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறாராம் ராஜமௌளி. இது குறித்த செய்திகள் முன்னதாக வெளியான நிலையில் ராஜமௌளியும் அதனை உறுதிப்படுத்தினார்.
My Next Film With @urstrulyMahesh 💥#SarkaruVaariPaata #SSMB29 pic.twitter.com/EPyLdr8sRa
— SSMB_BEATZ™🔔 (@ssmb_Beatz) December 10, 2021
RRR படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைப்பெற்றது, அப்போது பேசிய ராஜமௌளி “ எனது அடுத்த படம் மகேஷ் பாபுவுடந்தான் ...ஆனால் நான் இப்போது RRR படத்திற்கான வெளியீட்டில் கவனம் செலுத்துகிறேன். இந்தப் படத்தை பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வர விரும்புகிறேன். RRR படத்தை பெரும்பாலான மக்கள் பார்த்த பிறகு அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான் மகேஷ் பாபு உடனான படம் குறித்து யோசிக்க தொடங்குவேன் “ என தெரிவித்துள்ளார். ராஜௌமளி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கான திரைக்கதையை கே.வி விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். தற்போது SSMB29 என அழைக்கப்படும் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க விண்வெளியை மையமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதையாம். பிரம்மாண்டத்தை காட்டுவதற்காகவே ராஜமௌளி இந்த கதையை கையில் எடுத்திருப்பார் போலும் . வரலாற்று கதைகளை மையமாக கொண்டு படங்களை இயக்கி வந்த ராஜமௌளி தற்போது விண்வெளி கதையை கையில் எடுக்க இருப்பது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. வருகிற ஜனவரி 7 ஆம் தேதி RRR படம் வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டிற்கு பிறகு SSMB29 குறித்த மேலும் பல அறிவிப்பை எதிர்பார்க்கலாம் .