RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.
ராஜமௌலி இயக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையேயும், சினிமா விமர்சகர்களிடையேயும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அண்மையில் RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கனின் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. அஜய் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஐந்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையல்ல.
Witness the unstoppable force of fire and water on October 13, 2021. #RRRMovie #RRRFestivalOnOct13th@tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @thondankani @RRRMovie @DVVMovies pic.twitter.com/NCIHHXQ8Im
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2021
ராஜமௌலியின் இந்த திரைப்படம் 1920-களில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும் , ஜூனியர் NTR கோமாரம் பீமாவாகவும் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது என்றால் மிகையல்ல. பாலிவுட் நடிகை ஆலியா பட் சீதாவாகவும், ராம் சரணின் ஜோடியாக நடிக்கிறார். ஜூனியர் NTR-க்கு ஜோடியாக ஒலிவியா மோரிசன் நடிக்கின்றார், இவர் லண்டனை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு அஜய் தேவ்கன் குருவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Life has already become a new normal. We have to adapt to it and move on. And so our shoot resumes... :)https://t.co/qFlpsIHJpc
— rajamouli ss (@ssrajamouli) October 6, 2020
Await #RamarajuforBheemOnOct22.. #WeRRRBack.
ஹைதராபாதில் இந்த படத்திற்கான பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ஜனவரி 2021ல் படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் RRR திரைப்படம் உருவாக பல கலைஞர்களின் கூட்டு முயற்சி தேவைப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பின் இரண்டாம் கட்டம் பாதியில் நின்றது. அதன் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி பணிகள் இறுதி நிலையில் அடைந்தபோது கொரோனா இரண்டாம் அலை படப்பிடிப்பை மீண்டும் நிறுத்தியது.
இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் படப்பிடிப்பின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க படக்குழு ஆயத்தமாகி வருகின்றது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.