Sreenidhi : இனி புது முகம்.. புது தெளிவு.. மனநலனுக்கான ஹாஸ்பிடல் சிகிச்சையில் ஸ்ரீநிதி?!
சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்த ஸ்ரீநிதி தற்போது மருத்துவமனையில் கவுன்சிலிங் பெறத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஸ்ரீநிதி..
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியை அறியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது. வலிமை படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பகிர்ந்ததில் இருந்து அவர் சமூக வலைத்தளங்களில் பல எதிர்வினைகளை சந்திக்கத் தொடங்கினார். அதன்பின்னர் தினம் தினம் வைரல்தான். சின்னத்திரை நடிகை நட்சத்திரா குறித்து தகவல் வெளியிட்டது, சிம்புவை திருமணம்செய்ய வேண்டுமென தர்ணா இருந்தது என சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காகவே இருந்தார் ஸ்ரீநிதி.
தொடர்ந்து சர்ச்சையாக பேசி வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஸ்ரீநிதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வர தொடங்கிவிட்டன. ஆனாலும் சிலர் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துக்கொண்டு “ இந்த பெண்ணிற்கு இப்போது மருத்துவ உதவி தேவை “ என்றும் கருத்துகளை பகிர்ந்தனர்.
வைரல் பேட்டி..
இதற்கிடையே தனியார் சேனல் ஒன்றுக்கு முன்னதாகப் பேட்டியளித்த ஸ்ரீநிதி சிம்பு குறித்தும், தன் மனநிலை பற்றியும் மனம் விட்டுப் பேசியுள்ளார்.
“என்னை குழந்தை என சொல்கிறார்கள், எனக்கு இப்படி சொன்னால் கோபம் தான் வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் அது உண்மை என புரிகிறது. ஒரு பிரபல சேனலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். எனக்கு என் சமூகத்தை பிடிக்கவில்லை. என் குடும்பத்தை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள்.விண்ணைத் தாண்டி வருவாயாவும், போடா போடியும் என் கதைகள், நான் செய்யும் செயல்களை வைத்து இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. என் அம்மாவிடம் இதை சொன்னால் சிரிக்கிறார்கள். எல்லாரும் என்னை லேடி எஸ்.டி.ஆர் என்பார்கள். நான் சிம்பு மாதிரி இல்லை. சிம்பு தான் என்னை மாதிரி இருக்கார். எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. மீடியா பிடிக்காது. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என் ஆசை என்றார்.
View this post on Instagram
கவுன்சிலிங்..
தொடர்ந்து சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்த ஸ்ரீநிதி தற்போது மருத்துவமனையில் கவுன்சிலிங் பெறத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் காரணமாகவே ஸ்ரீநிதி இப்படி பேசி வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் சிகிச்சைபெறும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் புது ஸ்ரீநிதியாக அவர் ரசிகர்கள் முன் தோன்றுவார் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.