மேலும் அறிய

South Indian Artists: வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்... ரெட் கார்டு விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை

”ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது” என தென்னிந்திய

தமிழ் சினிமாவைச் சேர்ந்த 19 நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு வழங்கப்பட உள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில்,  தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்  சங்கங்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என, தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் செய்திகள் பரப்பப்படுகின்றன.  தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை.

நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளைக் கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான்.

ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்காமல், ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்ததாகத் தகவல்கள் பரவின.

முதலில் நடிகர்கள் சிம்பு,  எஸ்.ஜே. சூர்யா, அதர்வா, யோகி பாபு, விஷால் ஆகிய 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நடிகர்கள் சங்கத்திடம் இது குறித்து  விளக்கம் கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து, நேற்று முன் தினம், தனுஷ், ராய் லட்சுமி, அமலா பால் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. மேலும் இது குறித்து தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இத்தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இந்த அறிக்கை பகிரப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget