HBD Nandita Swetha : குமுதாவும் ஹேப்பி; ரசிகர்களும் ஹேப்பி.. நந்திதாவின் பிறந்தநாள் இன்று!
HBD Nandita Swetha : 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதாவின் பிறந்தநாள் இன்று.
![HBD Nandita Swetha : குமுதாவும் ஹேப்பி; ரசிகர்களும் ஹேப்பி.. நந்திதாவின் பிறந்தநாள் இன்று! South indian actress Nandita Swetha celebrates her birthday today HBD Nandita Swetha : குமுதாவும் ஹேப்பி; ரசிகர்களும் ஹேப்பி.. நந்திதாவின் பிறந்தநாள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/13a40622a7939c1ee071788445defc341714437819963224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒரு நடிகையாக திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் பெரும்பாலானவர்கள் ஹீரோயினாக வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு கதாநாயகியாக வேண்டும் என்பதை காட்டிலும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என என்னும் ஒரு சில நடிப்பு ராட்சசிகளின் வரிசையில் வந்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.
வி.ஜே முதல் நடிகை வரை :
ஒரு பிரபலமான மியூசிக் சேனலில் வி.ஜே வாக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். 2008ம் ஆண்டு கன்னட திரையுலகில் 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நந்திதாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து தன்னுடைய பெயரை நந்திதா என மாற்றிக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் வரவேற்பு :
2012ம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் தன்னுடைய படத்தில் நந்திதாவை அறிமுகப்படுத்தினார். நந்திதாவின் எளிமையான நடிப்பு, ஈர்க்கும் தோற்றம், வசீகரிக்கும் அழகு இவை அனைத்தும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க அதை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என் அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டார். அவரின் வலுவான கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் :
நடிகர் விஜய் ஜோடியாக 'புலி' படத்தில் சின்ன கேரக்டரில் தோன்றினார், அதற்கு பிறகு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிறு சிறு கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடித்து வந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ரீல்ஸ் ராணி :
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா அடிக்கடி மயக்கும் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார். அதே போல ரீல்ஸ் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்ட நந்திதாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க ரீல்ஸ்களை நிரப்பியுள்ளார். அவர் என்ன போஸ்ட், ரீல்ஸ் போட்டாலும் ரசிகர்கள் பாராட்டு மழையில் நனைத்து விடுவார்கள். அதே சமயத்தில் ரசிகர்களின் பாராட்டுகளுக்கு நன்றி சொல்லவும் நந்திதா மறந்ததில்லை. வரவிருக்கும் படங்கள் :
தற்போது தமிழ் சினிமாவில் செல்வாவின் இயக்கத்தில் 'வணங்காமுடி' மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் 'என் பெயர் கிராதகா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இப்படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரை ரசிகர்களின் விருப்பமான நடிகையான நந்திதா ஸ்வேதா இன்று தந்து 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)