மேலும் அறிய

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..!

பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் துணைத் தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலை பெற்ற நிலையில்,  வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். அத்துடன் மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளன. வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளது. மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என நடிகர் சங்கம் தரப்பில் வாதிட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்களுடைய தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

2015 சென்னை வெள்ளத்தை மையப்படுத்திய கதையில் சூரி...சம்பளமே இத்தனை கோடியா?
2015 சென்னை வெள்ளத்தை மையப்படுத்திய கதையில் சூரி...சம்பளமே இத்தனை கோடியா?
இலக்கிய மேடைகளில் குடும்ப நகைச்சுவையை கொண்டுவந்தவர்.,.சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை பயணம்
இலக்கிய மேடைகளில் குடும்ப நகைச்சுவையை கொண்டுவந்தவர்.,.சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை பயணம்
‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க வேண்டியவர் இவரா? கடைசி நேரத்தில் மாறிய ஹீரோ
‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க வேண்டியவர் இவரா? கடைசி நேரத்தில் மாறிய ஹீரோ
Karthigai Deepam: ரேவதியை திட்டும் கார்த்திக்.. கொலை செய்ய ஸ்கெட்ச் போடும் சிவனாண்டி - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: ரேவதியை திட்டும் கார்த்திக்.. கொலை செய்ய ஸ்கெட்ச் போடும் சிவனாண்டி - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Sep.11th: ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
Solomon Pappaiah: பட்டிமன்ற ஜாம்பவான், பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
பட்டிமன்ற ஜாம்பவான், பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Trump on Stopping War: ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Embed widget