Sudha Kongara: ‛இந்தி ‛சூரரைப் போற்று’... மாற்றங்களோடு வரும்..’ உண்மையை உடைத்த சுதா கொங்கரா!
சூரரைபோற்று இந்தி ரீமேக்கில் என்னனென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசியிருக்கிறார்.
சூரரைபோற்று இந்தி ரீமேக்கில் என்னனென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசியிருக்கும் சுதா கொங்கரா, “ ஆமா சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் இருக்கு. படம் ரிலீஸ் சமயத்துல நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. அதையெல்லாத்தையும் மனசுல வச்சு, உள்வாங்கிட்டு ஸ்கிரிப்ட திரும்ப எழுதிருக்கேன்.
சூர்யாவும், அக்ஷய் குமாரும் முற்றிலும் வித்தியாசமான நடிகர்கள். சூரரைப்போற்று படத்தை அக்ஷய் குமார் ஒரு முறை பார்த்தார். இன்னொரு முறை கூட பார்க்கவில்லை. அவர் அவருக்கே உரித்தான பாணியில் நடிக்க நினைச்சார்.
தமிழ் சூரரைப்போற்றுவை விட இந்தி சூரரைப்போற்று வித்தியாசமா இருக்கும். நாயகனுக்கு சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள்ல மாற்றம் இருக்கும், அதே போல நடிகர்களிலும் மாற்றத்தை பார்ப்பீங்க. சூர்யா அக்ஷய் இருவரும் வித்தியாசமான நடிகர்கள். அவர்கள் படத்திற்குள் எதை கொண்டு வருகிறார்களோ,அது கேரக்டரோட டோனை மாற்றும். அது எனக்கு மிகவும் நன்றாகவே வொர்க் அவுட் ஆகிருக்கு” என்றார்.
View this post on Instagram
தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப் போற்று’.சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு அமேசான் ஓடிடிதளத்தில் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு அண்மையில் சிறந்த படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது சிறந்த பின்னணி இசைக்கான விருது சிறந்த திரைக்கதைக்கான விருது என 5 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.