HBD Unnikrishnan | உன்னிகிருஷ்ணன் குரலா வரும்? ஆமா.. இரவை ரம்மியமாக்கும் ப்ளேலிஸ்ட்..!
இரவு நேரத்தை இனிமையாக்கும் உன்னிகிருஷ்ணன் குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் இதோ..
![HBD Unnikrishnan | உன்னிகிருஷ்ணன் குரலா வரும்? ஆமா.. இரவை ரம்மியமாக்கும் ப்ளேலிஸ்ட்..! Some of Unnikrishnan hit songs to be heard at night on his 55th birthday HBD Unnikrishnan | உன்னிகிருஷ்ணன் குரலா வரும்? ஆமா.. இரவை ரம்மியமாக்கும் ப்ளேலிஸ்ட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/e1c2bb353bb223ffb6f625cdf9fcec19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் பாடலுக்கு தேசிய விருது வென்ற பாடகர் பட்டியலில் உன்னிகிருஷ்ணனும் ஒருவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த குரலுக்கு சொந்தக்காரரான அவர் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவருடைய குரலில் வெளியான சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1.என்னவளே என்னவளே:
பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் காதலன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இப்பாடலை உன்னிகிருஷ்ணன் பாடியிருப்பார். இந்தப் பாடலுக்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.
“காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி….”
2.எனக்கே எனக்கா:
பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்த மெகாஹிட் திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். உன்னிகிருஷ்ணன் மற்றும் எஸ்பிபி மகள் பல்லவி ஆகியோர் இப்பாடலை பாடியிருப்பார்கள்.
“அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை
கவிபாடவே ஷெல்லியின்
வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்...”
3. வீசும் காற்றுக்கு:
அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருப்பார். உன்னிகிருஷ்ணன் உடன் சேர்ந்து பவதாரணி பாடியிருப்பார்.
“சிரிக்கிறேன்
இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய்
நழுவுகிறாய் விழிகள்
முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்
முதலா முடிவா
சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன்
காதலிலே..”
4. சேலையிலே வீடு கட்டவா:
அஜித்,சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் மற்றும் சித்ரா பாடியிருப்பார்கள். இப்பாடலுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார்.
“ஓவியத்தைத் திரை
மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே
நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை
மூடாதே விழியை மூடும்
போதிலும் விரல்களாலே
தேடாதே...”
5. நிலவை கொண்டு வா:
அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு தேவா இசையமைத்திருப்பார்.
“காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு...”
இவை தவிர உயிரும் நீயே, சோனியா சோனியா, ஏதோ ஒரு பாட்டு உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை உன்னிகிருஷ்ணன் கொடுத்துள்ளார். அவற்றை அடுக்க இன்று ஒருநாள் போதாது.
மேலும் படிக்க: பிறந்தநாள் ஸ்பெஷல்.. நடிகை ரேவதியின் ஹிட் பாடல்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)