மேலும் அறிய

Sobhita Dhulipala: அழகா இல்ல, வெள்ளையா இல்லனு சொன்னாங்க... ‘பொன்னியின் செல்வன்’ ஷோபிதா வேதனை..!

தற்போது பிரபல நடிகையாக விளங்கும் ஷோபிதா தன் திரைப் பயணத்தில் தொடக்க காலங்களில் தான் நிராகரிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ளார். 

மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிறகும் தான் வெள்ளையாக இல்லை, அழகாக இல்லை என்றெல்லாம் கூறி நிராகரிக்கப்பட்டதாக நடிகை ஷோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' பட நடிகை:

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷோபிதா. பிரபல பாலிவுட் நடிகையான ஷோபிதா,  பொன்னியின் செல்வன் பாகங்களில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

மேலும் சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பிறகு நடிகை ஷோபிதாவுடன் இணைத்து நாகசைதன்யா கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் ஷோபிதா பேசுபொருளாகியுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகையாக விளங்கும் ஷோபிதா தன் திரைப் பயணத்தில் தொடக்க காலங்களில் தான் நிராகரிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ளார். 

'அழகா இல்ல, வெள்ளையா இல்ல'

மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு ஷோபிதா பெற்ற நிலையில், அதன் பின்னரும் தான் அழகாக இல்லை, வெள்ளையாக இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"எனக்கு நியாபகம் இருக்கிறது, என் முகத்துக்கு நேராகவே நான் போதிய அளவு அழகாக இல்லை, வெள்ளையாக இல்லை எனக் கூறி நிராகரித்தனர். அதன் பின்னரே, ஒரு வெற்றிகரமான வணிகத் திரைப்பட தயாரிப்பாளருக்காக காத்திருக்காமல், நான் வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்கினேன். நான் ஆடிஷன்களுக்கு செல்வது என் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. எனது கட்டுப்பாட்டில் இருப்பது ஆடிஷனுக்குச் செல்வதுதான், அதற்கு நான் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோல் சமந்தா , நாகசைதன்யா இருவரிடமும் தான் ரசிக்கும் குணங்கள் குறித்து ஷோபிதா பேசியிருந்தார்.  

வதந்திகளுக்கு பதில் தேவையில்லை:

முன்னதாக மற்றொரு நேர்க்காணலில் நடிகை சமந்தாவின் திரைப்பயணம் நன்றாக இருக்கிறது ஷோபிதா தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் நாகசைதன்யா பற்றி முதன்முறையாக மனம் திறந்த ஷோபிதா, அவருடைய சுபாவம் பிடிக்கும், அவர் மிகவும் அமைதியான பையன், மிகவும் கண்ணியமானவர். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன்" எனப் பேசியுள்ளார். 

மேலும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்திருந்த ஷோபிதா, “அறிவில்லாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில், இவற்றையெல்லாம் உணர வேண்டும் என நான் விரும்பவில்லை” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

முன்னதாக ‘தி நைட் மேனேஜர்’ தொடரில் ஷோபிதா அனில் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷோபிதா தற்போது மங்கி மேன் எனும் அமெரிக்க படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியில் சித்தாரா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: Actor Vijay Video: குழந்தைகளுடன் சேர்ந்துட்டா தளபதி எப்பவுமே க்யூட்தான் - நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget