மேலும் அறிய

”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !

"ஆனால் நிஜ வாழ்க்கையில இருக்கும் உறவின் ஆழத்தை சிபி சொல்ல ஆசைப்பட்டாரு. அதுதான் டான் திரைப்படம்"

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் டான். டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து லைகா புரொடக்ஷன்சுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.மேலும் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். சிவக்கார்த்திகேயன் ஸ்டூடண்டாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cibi Chakaravarthi (@dir_cibi)

அவர் பேசியதாவது : ”டாக்டர் திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. டான் திரைப்படம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் கதை . உங்களுடைய கதை. அதை இயக்குநர் படமாக்கனும்னு நினைத்ததற்கு முதலில் நன்றி. படத்தில் சமுத்திரக்கனி சாருக்கு ஒரு ஆழமான கதாபாத்திரம். அவர் எப்போதுமே நான் துவண்ட சமயத்தில் தம்பி வாடா..வெல்வோம் அப்படினு ஆறுதலாக இருந்தாரு. டிரைலரில் ஒரு டயலாக் வரும் “ பேசாமல் நாம அரசியலுக்கு போயிடுவோமா ?.. “அங்கே பொய்யல்லாம் பேசனும்பா என்றதும், உடனே உதயநிதி சார் என்னை பார்த்தாரு.

அந்த டயலாக்கை சிபி வைக்காம இருந்திருக்கலாம். ஆனாலும் உதயநிதி சார் அதை ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டாரு. நன்றி சார். நான் கல்லூரி காலங்களில் எஸ்.ஜே.சூர்யா சாருடைய வாய்ஸ்ல பேசுவேன். நிறைய பேர் என்னிடம் கேட்பாங்க அந்த வாய்ஸ் பண்ண சொல்லி, நான் எஸ்.ஜே.சூர்யா சார்க்கிட்ட சொல்லும் பொழுது , அவர் ரொம்ப சந்தோசப்பட்டாரு. அவர் வாய்ஸ் எடுத்து பண்ண நான் , அவர் கூடவே நடித்தது அவ்வளவு சந்தோசம். அவர்க்கிட்ட அவ்வளவு எனர்ஜி இருக்கும்.

ஷிவாங்கி எப்போதும் ஒரே மாதிரிதான்.படத்துக்கு முன்னால ஒரு மாதிரி , பின்னால ஒரு மாதிரி கிடையாது.அனிருத் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் , அவர் கொடுக்குற ஹிட் பாடல்கள் எல்லாத்தையும் தாண்டி , அவருடை நட்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.இயக்குநர் சிபி கடுமையா உழைக்குறாரு. மீதியை ஆடியன்ஸ் பார்த்துப்பாங்க. அவர் உழைப்ப நான் நம்புறேன்.எமோஷன்ஸ்ற்கு எப்போதுமே மதிப்பு உண்டு. சமூக வலைத்தளங்கள்ல நாம பார்க்குற உலகம் எல்லாம் ரொம்ப விளையாட்டானது.

அது ஜாலியா பேசி ஜாலியாவே முடிஞ்சு போயிடும் . ஆனால் நிஜ வாழ்க்கையில இருக்கும் உறவின் ஆழத்தை சிபி சொல்ல ஆசைப்பட்டாரு அதுதான் டான் திரைப்படம் . எங்க அப்பாவோட யூனிஃபார்ம் மிடுக்கு எல்லாத்தையும் பார்த்துட்டு நான் அவரை போல போஸிஸ் அதிகாரியாகனும்னு நினைத்திருந்தேன். அவரும் ஐ.பி.எஸ் அதிகாரியாக  மாறி , என்னை  விட மேல் அதிகரியாக ஆகவேண்டும் என நினைத்தார். அதுதான் என் கனவாகவும் இருந்தது.அப்போவோட மறைவுக்கு பிறகு அந்த வேலை மீது  பயம் வந்துருச்சு.அதன் பிறகு உங்கள் கைத்தட்டல்தான் என்னை இதை பற்றிக்கொள்ள வச்சது“ என சிவக்கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget