மேலும் அறிய

TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!

டாடா சியரா இ.வி. மற்றும் மஹிந்திராவின் XEV 9e ஆகிய இரண்டு பிரீமியம் எலக்ட்ரிக் கார்களின் டிசைன், ரேஞ்ச், சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த முழுமையான ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் டாடாவின் சியரா இ.வி. (Sierra EV) மற்றும் மஹிந்திராவின் XEV 9e ஆகிய இரண்டு பிரீமியம் எலக்ட்ரிக் கார்களின் டிசைன், ரேஞ்ச், சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த முழுமையான ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைன் மற்றும் வடிவமைப்பு


டாடா சியரா EV, அதன் பாரம்பரிய ரெட்ரோ- மாடர்ன் எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பாக்ஸி டிசைன், தட்டையான ரூஃப் மற்றும் பெரிய கிளாஸ் ஏரியா ஆகியவை பழைய சியரா மாடலை நினைவூட்டும் வகையில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், மஹிந்திரா XEV 9e மாடலானது முற்றிலும் நவீன கூபே எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் சாய்வான ரூஃப்லைன் மற்றும் ஏரோடைனமிக் தோற்றம் காரை மிகவும் ஸ்போர்ட்டியாக காட்டுகிறது.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

மஹிந்திரா XEV 9e மாடலில் 59 kWh மற்றும் 79 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள பெரிய 79 kWh பேட்டரி முழு சார்ஜில் அதிகபட்சமாக 656 கி.மீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சியரா EV மாடலானது ஆக்டிவ்.இவி (Acti.ev) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. டாட்டா சியரா காரின் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்ட்டி அளிக்கப்படுவதாக அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கார் 0 – 100 கி.மீ.வேகத்தை வெறும் 5.8 விநாடிகளில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 75 KWh திறன் கொண்ட பேட்டரிக்கு 665 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் எனவும் 63 KWh பேட்டரிக்கு 565 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 15 நிமிடத்தில் 263 கி.மீ. ரேஞ்ச் டாப் அப் செய்ய முடியும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டு கார்களுமே அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கின்றன.

சிறப்பம்சங்கள்

மஹிந்திரா XEV 9e மாடலின் உட்புறத்தில் டேஷ்போர்டு முழுவதும் பரவியுள்ள மூன்று 12.3 இன்ச் திரைகள், லெவல் 2+ ADAS பாதுகாப்பு வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஹர்மன் கார்டன் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடா சியரா EV மாடலிலும் பெரிய அளவிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

விலை ஒப்பீடு

மஹிந்திரா XEV 9e காரின் தொடக்க விலை ரூ.21.90 லட்சமாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட் மாடலின் விலை ரூ.30.50 லட்சம் ஆகும்.

டாடா சியரா EV ஜூலை 15ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.18.79 லட்சம் முதல் ரூ.25.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரை விற்பனை ஆக உள்ளது. அதாவது பட்ஜெட் காராக இருக்க வேண்டுமென நினைத்தால், சியரா சரியான தேர்வாக இருக்கும். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Best Sunroof Cars under 10 Lakh: பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
Bajaj Electric Motorcycle: சிறப்பான அறிவிப்பு.. இ-பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்.. எப்போ தெரியுமா?
Bajaj Electric Motorcycle: சிறப்பான அறிவிப்பு.. இ-பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்.. எப்போ தெரியுமா?
Maruti brezza 2026: வென்யூ, நெக்ஸானுக்கு செக்! புதிய பிரெஸ்ஸா போட்டோ லீக்? மாஸ் லுக்..மிரட்டும் டாப் 5 அம்சங்கள்!
வென்யூ, நெக்ஸானுக்கு செக்! புதிய பிரெஸ்ஸா போட்டோ லீக்? மாஸ் லுக்..மிரட்டும் டாப் 5 அம்சங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Best Sunroof Cars under 10 Lakh: பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Embed widget