
Amaran First Single : ஹே மின்னலே...ஜி.வி இசையில் காதல் பாட்டு..அமரன் பட முதல் பாடல் அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்

அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன் . சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தழுவி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது அமரன். வரும் தீபாவளிக்கு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது
அமரன் பட முதல் பாடல்
The first single will be a love song from #Amaran …. Titled …. ✨Hey Minnale✨#HeyMinnale …. @Siva_Kartikeyan #saipallavi @RKFI … coming in few days …. @ikamalhaasan @Rajkumar_KP#Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin…
— G.V.Prakash Kumar (@gvprakash) September 24, 2024
அமரன் படத்தின் முதல் பாடல் ஒரு காதல் பாடல் என்று இப்பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

