மேலும் அறிய

A R Rahman: ஆஸ்கர் வென்ற பாடலுக்கு இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் இல்லையா? பாடகர் சுக்விந்ர்சிங் பதில்

ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா சொன்னது உண்மையில்லை என்று பாடகர் சுக்விந்தர் சிங் கூறியுள்ளார்

ஆஸ்கர் வென்ற ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் தான் இசையமைத்தார் தான் அந்த பாடலை பாட மட்டுமே செய்தேன் என்று பாடகர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறிய தகவல் சமுக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் அந்தப் பாடலை பாடகர் சுக்விந்தர் சிங் தான் இசையமைத்தார் என்று ராம் கோபால் வர்மா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்கர் நாயகன் என்று ரஹ்மானுக்கு புகழைச் சேர்த்த அந்தப் பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்கிற தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக ரஹ்மான் என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் ராம் கோபால் வர்மா கூறியதை மறுத்து பாடகர் சுக்விந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்.

ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்தது யார்

”ஜெய் ஹோ பாடல் சுபாஷ் காய் இயக்கிய யுவராஜ் படத்திற்கு முதலில் உருவானது. குல்ஸார் தான் அந்தப் பாடலை எழுதியிருந்தார். அப்போது அந்த பாடலை நான் பாடவில்லை. அந்த பாடலை இயக்குநர் சுபாஷ் காய் இடம் ரஹ்மான் போட்டு காடினார். ஆனால் சுபாஷ் காய்க்கு அந்தப் பாடல் படத்திற்கு பொருத்தமானதாக தெரியவில்லை என்று கூறினார். பாட்டில் சில மாற்றங்கள் செய்யட்டுமா என்று ரஹ்மான் அவரிடம் கேட்டார். ஆனால் அந்தப் பாட்டையே மொத்தமாக மாற்ற வேண்டும் என்று சுபாஷ் காய் கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு சுபாஷ் காய் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார். ரஹ்மானும் சென்றுவிட்டார். ஸ்டூடியோவில் நானும் பாடலாசிரியர் குல்ஸார் மட்டுமே அந்த இடத்தில் இருந்தோம். குல்ஸாரை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொல்லிவிட்டு அந்த பாடலை நான் ஸ்டுடியோவில் மனம் போன போக்கில் பாடினேன். பின் அதை ரஹ்மானுக்கு அனுப்பினேன். ரஹ்மான் அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டானி பாயலுக்கு அந்தப் பாடலை அனுப்பி வைத்தார். அப்படிதான் அந்தப் பாடல் உருவானது. ஜெய் ஹோ பாடல் முழுக்க முழுக்க ரஹ்மானின் திறமையால் உருவானது. நான் அதில் பாட மட்டும் தான் செய்தேன். ராம் கோபால் வர்மா நிச்சயமாக தவறாக எதையோ கேள்வி பட்டிருக்கிறார். “ என்று சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

சுக்விந்தர் சிங் விளக்கமளித்தப் பின் ரஹ்மான் ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளார்கள் என்று சொல்லலாம் 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Embed widget