மேலும் அறிய

Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்

Kenishaa Francis : நடிகர் ஜெயம் ரவியுடன் தொடர்புபடுத்தி வெளியான வதந்திகளுக்கு பாடகி கெனீஷா பிரான்சிஸ் முதலும் கடைசியுமாக விளக்கமளித்துள்ளார்

Kenishaa Francis : வதந்திகள் குறித்து பாடகி கெனீஷா விளக்கம்

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பிரச்சனைக்கு முக்கிய காரணம் பாடகி கெனீஷா என வதந்திகள் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் தற்போது பிரபல செய்தி நிறுவனத்திற்கு கெனீஷா முழுமையான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இதுவே முதலும் கடைசியுமாக தான் இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

என் தன்மானத்தை விட்டுக்கொடுக்கமாட்டேன்

”இந்த பிரச்சனை தொடங்கியதில் இருந்து என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். இந்த வதந்திகள் அவர்களை கவலையுற செய்திருக்கிறது. என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கு என் வேலையைப் பற்றியும் என் கேரக்டரை பற்றியும் நன்றாக தெரியும். எந்த ஒரு மனிதரின் மனநல தேவைகளையும் புரிந்துகொண்டு அவர்களிடம் கனிவாக நடந்துகொள்பவளாக நான் இருந்திருக்கிறேன். என்னைப் பற்றி இணையத்தில் வெளியான அனைத்தும் அப்பட்டமான பொய்கள். ஓரளவிற்கு தான் என்னால் பொறுமையாக இருக்க முடியும். அதற்கு மேல் என் யாருக்காகவும் என் தன்மானத்தை நான் இழக்கமாட்டேன்"

ஜெயம் ரவியுடன் முதல் சந்திப்பு பற்றி கெனீஷா 

கெனீஷாவின் 'இதை யார் சொல்வாரோ' பாடல் வெளியிட்டு விழாவில் ஜெயம் ரவியை முதல் முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியபோது  "அந்த சந்திப்பிற்கு பிறகு நாங்கள் குறைவாகவே பேசிக்கொண்டோம் அதுவும் தொழில் நிமித்தமாக.  ஒருமுறை அவர் தனது குடும்பத்தைப் பற்றி பேசிய வீடியோவை பார்த்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நான் ஒரு மனநல மருத்துவர் என்று ஜெயம் ரவியிடம் முன்பே தெரிவித்திருந்தேன். எனக்கு மொத்தம் 182 க்ளையண்ட்கள் இருக்கிறார்கள். அதில் ஜெயம் ரவியும் ஒருவர். ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவுக்கு நான் தான் காரணம் என பலர் சொல்கிறார்கள் ஆனால் தனது வக்கீல் மூலம் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பின்னரே ஜெயம் ரவி மனநல சிகிச்சைக்காக என்னை அனுகினார்.

சென்னையில் இதுபற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவர் என்னிடம் இதை பற்றி பேசினார். அந்த நேரத்தில் ஆர்த்தியுடனான திருமண உறவில் அவர் மனதளவில் மிகவும் காயப்பட்டிருந்தார். அவர் என்னிடம் இதை சொன்னதும் நான் உடனே அவருக்கு சரி என்று சொல்லவில்லை. முதலில் அவரை என்னால் குணப்படுத்த முடியுமா? என்பதை எனக்கு நானே உறுதிப்படுத்திக்கொண்டேன்” என்றார்

கோவாவில் நடந்தது என்ன?

கோவாவில் ஜெயம் ரவிக்கு பெங்களூரில் காரை அதிவேகமாக காரை ஓட்டிய காரணத்திற்காக அவருக்கு  அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கோவாவில் டிண்டட் கிளாஸை பயன்படுத்தியதற்காக கெனீஷா பெயரில் அபராதம் கட்டப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகின. இது குறித்து கெனீஷா தெரிவிக்கையில் "ஜெயம் ரவி என்னை பார்க்க சென்னையில் இருந்து கோவாவரை காரில் வந்திருந்தார். இதனால் அவர் சோர்வடைந்திருந்தார். அவர் அதிவேகமாக காரை ஓட்டியதற்கு அபராதம் கட்டியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோவாவின் என்னுடைய சிகிச்சை மையத்தை அவரால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் நானும் என்னுடைய தோழி ஒருவரும் என்னுடைய காரை எடுத்துக்கொண்டு அவரை ஒரு பொது இடத்தில் பார்க்க சென்றோம். என்னுடய காரை நான் என் தோழியிடம் கொடுத்துவிட்டு ஜெயம் ரவியின் காரை ஓட்டி அவரை சிகிச்சை மையத்திற்கு கூட்டிச் சென்றேன். அப்போது அபராதம் கட்ட நான் என்னுடைய அடையாள அட்டையை கொடுத்தேன்" என்றார்

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து சுருக்கம்

நடிகர் ஜெயம் ரவி தனது பிறந்தநாளுக்கு முந்தைய  நாள் செப்டம்பர் 9-ஆம் தேதி தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்தை அறிவித்தார். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் முடிவு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னுடைய சம்மதம் இல்லாமல் எடுத்துள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்தார். ஜெயம் ரவி ஆர்த்தி இருவரில் எந்த தரப்பு பக்கம் நியாயம் உள்ளது என சமூக வல்கைதளங்களில் விவாதம் தொடங்கியது. இந்நிலையில் தான் ஜெயம் ரவிக்கும் பிரபல கோவா பாடகியான கெனீஷா பிரான்சிஸ்க்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு வதந்திகள் பரவின.

ஜெயம் ரவியும் கெனீஷாவும் கோவாவில் காரில் அதிவேகமாக சென்ற காரணத்திற்காக அவர்களுக்கு காவல் துறை அபராதம் விதித்ததாகவும் தரவுகள் முன்வைக்கப்பட்டன.  இது குறித்து ஜெயம் ரவி பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தனது தனிப்பட்ட பிரச்சனையில் யாரையும் சம்பந்தபடுத்தி பேச வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தார். தானும் கெனீஷாவும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார். 

கூறிப்பு : கெனீஷா பிரான்சிஸ் DT NEXT பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியவையே இந்த தகவல்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Keneeshaa Francis : யாரிடமும்  தன்மானத்தை இழக்கமாட்டேன்... அவதூறுகளுக்கு முதலும் கடைசியுமாக விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
Keneeshaa Francis : யாரிடமும் தன்மானத்தை இழக்கமாட்டேன்... அவதூறுகளுக்கு முதலும் கடைசியுமாக விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Keneeshaa Francis : யாரிடமும்  தன்மானத்தை இழக்கமாட்டேன்... அவதூறுகளுக்கு முதலும் கடைசியுமாக விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
Keneeshaa Francis : யாரிடமும் தன்மானத்தை இழக்கமாட்டேன்... அவதூறுகளுக்கு முதலும் கடைசியுமாக விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget