மேலும் அறிய

திமுக அரசு போல் பாலியல் குற்றவாளிக்கு அடைக்களம் கொடுக்கிறதா தவெக? பாடகி சின்மயி கேள்வி

ராப் பாடகர் வேடனை பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்

பிரபல ராப் இசை பாடகர் வேடன் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசை சந்தித்ததைத் தொடர்ந்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை அவர் நேற்று சந்தித்தார். பல பெண்களால் பாலியல் குற்றம்ச்சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு தவெக அரசு அடைக்களம் கொடுக்கிறதா என பின்னணி பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்

வேடனை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் 

வேடனை சந்தித்தது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 'மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை ராப் இசைப் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான வேடன் என்கிற திரு. ஹிரந்தாஸ் முரளி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.' என கூறப்பட்டுள்ளது

சின்மயி கேள்வி 

இதற்கு சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்களுக்கு மேடை அமைத்துத் தந்த முந்தைய நிர்வாகங்கள் செய்த அதே தவறை தவெக மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கோவிட் காலத்தில், கோவிந்த் வசந்தா, முஹ்சின் பராரி, வேட்ன் மற்றும் நான் இணைந்து ஒரு பாடலை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. மலையாளம் சார்ந்த ஒரு 'கிளப்ஹவுஸ்' (Clubhouse) நிகழ்வில் நான் பங்கேற்றபோது, ​​வேட்னுடன் நான் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். அப்போது அதுகுறித்த செய்திகள் பெரும்பாலும் மலையாளத்தில்தான் இருந்தன, அதனால் எனக்கு அதுபற்றித் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, வேறு சிலராலும் வேடன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து நிராகரித்து வந்தேன்; இதனால் எனது சொந்தப் பணிகளும் வாய்ப்புகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. சமூகச் செயல்பாட்டை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திப் பெண்களின் சம்மதத்தை மீறும் ஆண்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரச்சனை என்னவென்றால், வேடன் போன்ற ஆண்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பும் பெண்களுக்கு, அதே சமூகக் குழுக்களில் உள்ளவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை; அவர்கள் முற்றிலும் தனித்து விடப்படுகிறார்கள். ஏனெனில், அந்த ஆண் ஒரு 'ஹீரோ' அல்லது 'தலைவர்' என்று பார்க்கப்படுகிறார்; அதே சமயம் 'பொதுநலன்' அல்லது 'பெரிய நன்மை' கருதி பெண்கள் அவரது அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குரலற்றவர்களின் குரலாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்களில் சிலர், தாங்கள் எதிர்ப்பதாகக் கூறும் அதே வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே நீடிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. " என சின்மயி கூறியுள்ளார்

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget