மேலும் அறிய

Benny Dayal : ‘இசைக்கருவிகளை உடைச்சிட்டாங்க.. இப்படியா நடந்துப்பீங்க’ - ஏர்லைன்களை கடுமையாக சாடிய பாடகர் பென்னி தயாள்!

இண்டிகோ,விஸ்டாரா,ஏர் இந்தியா,ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் இசைக் கருவிகளை பார்த்துக் கொள்வதில் மிக மோசமாக இருக்கிறது

'மதுரைக்கு போகாதடி' ,'பல்லே லக்கா' ,'ஓமணப் பெண்ணே' போன்ற பாடல்கள் வெளியாகி ஆண்டுகள் பல இருந்தாலும் இன்று வரை வைப்ரண்டாக மக்களிடயே இருந்து வருகிறது. இதற்கு காரணம் அந்த குரலுக்கு பின்னால் இருக்கும் எனர்ஜி தான்; அந்த குரலுக்கு சொந்தக்காரர்,பென்னி தயாள். இவர் கடைசியாக லெஜெண்ட் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'வாடி வாசல் ' பாடலை பாடியிருந்தார். அவ்வபோது  இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
                                       
                                          Benny Dayal : ‘இசைக்கருவிகளை உடைச்சிட்டாங்க.. இப்படியா நடந்துப்பீங்க’ - ஏர்லைன்களை கடுமையாக சாடிய பாடகர் பென்னி தயாள்!

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பதிவில் அவர் ஏர்லைன்-களின் அஜாக்கிரதையினால் இசை கருவிகள் மற்றும் பொருட்கள் சேத மடைகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

அந்த பதிவில் அவர்,"இது இந்தியாவிலுள்ள அனைத்து ஏர்லைன்களுக்குமான செய்தி. இசைக்கலைஞர்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இசை நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போது அவர்களது இசைக்கருவிகளை ஏர்லைன்கள் சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இண்டிகோ,விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் இது போன்று இசைக்கருவிகளை எடுத்துச் செல்லும் போது அக்கறையின்றி செயல்படுகிறது.

பலர் தங்களது பொருட்களை உடைந்த நிலையில் எடுத்துச் செல்வது போன்ற காணொளிகளை பார்த்து வருகிறேன்; அது உங்களது அஜாக்கிரதையினால் தான் நிகழ்கிறது. அதனை எப்போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட முறையில் 'விஸ்தாரா' நிறுவனம் ஏழு நாட்கள் இடைவெளியில், எனது இரண்டு பேக்குகளை உடைத்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

அது எனக்கு திரும்ப வேண்டும். அதே நேரத்தில் 'இண்டிகோ' நிறுவனமும் இசை கலைஞர்களிடம்  அக்கறையின்றி செயல்படுகிறது; ஏர்லைன்-களில் பொருட்களை பார்த்துக் கொள்ளும் குழுவை நல்ல முறையில் தேர்வு செய்ய வேண்டும்; இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பே இது போன்று உடைந்து விடுகிறது.

எங்களது இசைக்கருவிகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்; எங்களுக்கு இசைக்கருவிகள் மிகவும் முக்கியமானது; அது தான் எங்களுக்கு உணவளிக்கிறது. இண்டிகோ,விஸ்தாரா,ஏர் இந்தியா,ஸ்பேஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் இசைக் கருவிகளை பார்த்துக் கொள்வதில் மிக மோசமாக இருக்கிறது. தயவு செய்து பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.அது  உடைந்தால் அந்த தவறுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்." என கடுமையாக சாடியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget